Home /News /tamil-nadu /

தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா! புதிய திட்டத்துடன் ஆட்களைத் தேடும் திருப்பூர் நிறுவனங்கள்

தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா! புதிய திட்டத்துடன் ஆட்களைத் தேடும் திருப்பூர் நிறுவனங்கள்

திருப்பூர் பின்னலாடை நிறுவனம்- கோப்புப் படம்

திருப்பூர் பின்னலாடை நிறுவனம்- கோப்புப் படம்

வேலையில்லையா…. கவலை வேண்டாம்… எங்க ஊருக்கு வாருங்கள்… கை நிறைய சம்பளத்துடன், பல்வேறு சலுகைகளும் காத்திருக்கின்றன என்று கூவி... கூவி...திருப்பூர் அழைக்கிறது .

  • News18
  • Last Updated :
நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் என்றால், திருப்பூரில் வேலையாட்கள் கிடைப்பது  திண்டாட்டமாக உள்ளது.

உலகில் பின்னலாடைத் தொழிலில் சர்வதேச ஆர்டர்கள் பெறுவதில் திருப்பூர் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பின்னலாடை தேவையில் 55 விழுக்காட்டை திருப்பூர்தான் பூர்த்தி செய்கிறது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு 27,000 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைக்கிறது.

நிலைமை இப்படி இருக்கையில், லட்சக்கணக்கில் வெளிநாட்டு ஆர்டர்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவற்றை சப்ளை செய்ய முடியாமல் இங்குள்ள நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இதற்கு காரணம் தொழிலாளர்கள் பற்றாக்குறைதான்.

அதனால் தொழிலாளர்களைக் கவர்ந்திழுக்க, ஆண்டு முழுவதும் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு தங்க நாணயம், தாய்லாந்து, பாங்காக் என வெளிநாட்டு சுற்றுலா என்று பல சுவாரஸ்யமான சலுகைகளை வழங்க இந்த நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றன. இருப்பினும் ஆட்கள் பற்றாகுறை தீர்ந்தபாடில்லை என்று பின்னலாடை நிறுவனத்தின் அதிபர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். .

மேலும் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்திய காலத்தில் பின்னலாடை உற்பத்தியில் ஏற்பட்ட பின்னடைவே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வேலையிழந்த பல தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால், தற்போது அதிக ஆர்டர்கள் குவியும் நேரத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று பின்னலாடை நிறுவன அதிபர் செல்வராஜ் கூறுகிறார்.

மேலும், பின்னலாடை நிறுவனங்களில் பணியாளர்களுக்கு குடியிருப்புக்கள் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவும் ஆட்கள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ளது என்று பின்னலாடை தொழிலாளர் குமார் என்பவர் கூறுகிறார்.

நாட்டில் தலைவிரித்தாடும் வேலையில்லா பற்றாக்குறையை போக்க தயாராக இருக்கும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் படிக்க... தங்கத்தின் கதை தெரியுமா?





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Thiruppur

அடுத்த செய்தி