உட்கார்ந்து சாப்பிட வாடிக்கையாளர்கள் அச்சம் - காற்றாடும் திருப்பூர் உணவகங்கள்

அரசு அனுமதி அளித்தாலும் உட்கார்ந்து சாப்பிட வாடிக்கையாளர்கள் அச்சப்படுவதால் உணவகங்கள் வெறிச்சோடியுள்ளன

உட்கார்ந்து சாப்பிட வாடிக்கையாளர்கள் அச்சம் - காற்றாடும் திருப்பூர் உணவகங்கள்
காலியாக இருக்கும் உணவகங்கள்
  • News18
  • Last Updated: June 8, 2020, 10:58 AM IST
  • Share this:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் இன்று முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம் என அரசு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூரில் உள்ள உணவகங்கள் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆனால், கொரோனா பீதி காரணமாக அமர்ந்து சாப்பிட பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான உணவகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 75 நாட்களுக்கு பிறகு இன்று உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கு அரசு தளர்வை அறிவித்துள்ளது. எனினும், கொரோனா பரவல் தொடர்பான பயம் காரணமாக உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு பெரும்பாலான  பொதுமக்கள் ஆர்வம் காட்டாத நிலையில், இரண்டரை மாதம் கழித்து உணவகங்களை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு உணவக உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து கடை வாடகை மற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க முடியாத சூழலில் உணவகங்களை திறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.








First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading