ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உறவினரால் சிற்பியின் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம் - விசாரிக்கும் போலீஸ்

உறவினரால் சிற்பியின் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம் - விசாரிக்கும் போலீஸ்

கொலையான பெண்

கொலையான பெண்

கிருத்திகா உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தாராபுரம் அடுத்த மூலனூரில் சிலை செய்யும் சிற்பியின் மனைவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம்  மூலனூர் அருகே திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (34), சிற்பி. இவரது மனைவி கிருத்திகா (28), இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பொன்னுச்சாமியின் உறவுக்காரான கந்தசாமி (37), மனைவியை விட்டு பிரிந்து கடந்த ஐந்து வருடங்களாக தனியாக வசித்து கொண்டு சிற்பத் தொழில் செய்து வருகிறார், அடிக்கடி கிருத்திகாவின் வீட்டுக்கு வரும் கந்தசாமிக்கும் கிருத்திகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Also Read:  காதல் கணவனை உருட்டு கட்டையால் அடித்துக்கொன்ற பள்ளி ஆசிரியை

இந்நிலையில்  கிருத்திகாவை சந்திக்க வந்த கந்தசாமி வழக்கம்போல கிருத்திகா உடன் தகராறு செய்துவிட்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய கிருத்திகாவின் கணவர் பொன்னுச்சாமி வீட்டுக்குள் நுழைந்த போது, கிருத்திகா முழு நிர்வாண நிலையில் உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

Also Read:  தலைமுடியை கிண்டல் செய்ததால் கொலை: சிறுவன் உட்பட 5 பேர் கைது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பவம் குறித்து மூலனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில்  தாராபுரம்  காவல்துறை துணை கண்காணிப்பாளர்  தன்ராஜ்  தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து கிருத்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கிருத்திகாவின் கொலைக்கு  கொழுந்தனார் முறையான கந்தசாமி யுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமா  அல்லது இருவருக்கும் இடையே தகாத உறவு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான  சிற்பி கந்தசாமியை போலீசார்தேடி வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime News, Death, Murder