வாக்கிங் வரும்போது மட்டும் திருடும் விநோத திருடன்.. திருப்பூரில் கைது

வாக்கிங் திருடன்

வாக்கிங் வரும்போது இருசக்கர வாகனங்களை திருடும் விநோத திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  காலையில் வாக்கிங் வரும் போது மட்டும் இருசக்கர வாகனங்களை திருடும் திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர். 

  திருப்பூரில் காவலர் குடியிருப்பு அருகில்  கடந்த இரண்டு மாதங்கள் முன்பு வீதியில் நின்ற இருசக்கர வாகனம் காணாமல் போனது குறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதே போல் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இதே பானியில் இருசக்கர வாகனம் காலையில் திருடு போனது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆராய்ந்து பார்த்தபோது  இரண்டு இடத்திலும் ஒரேநபர் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

  அருகில் இருந்த கண்காணிப்பு கேமரவை  பார்க்கும் போது இரண்டு இடத்தில் ஒரே நபர் திருடியது தெரிய வந்தது.பின்னர் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் ரவி தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் திருடப்பட்ட வாகனங்களை காலையில் வாக்கிங்  செல்லும் நபர் வண்டியை தள்ளிச் செல்வது தெரியவந்தது.

  திருடும் வாகனங்களை  கொங்கு மெயின் ரோடு வரை தள்ளிச் சென்றதை  தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.  அந்த பகுதியில்  தொடர்ந்து கண்காணித்து வாகனத்தை திருடிய நபரை பிடித்தனர். விசாரணையில் வாகனத்தை திருடிய நபர் ராஜ்குமார் என்றும் சட்டம் படித்த இவர்  எந்த வழக்கிற்கும் போய் வாதடியது இல்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதே போல் மாத இதழில் செய்தியாளர் அடையாள அட்டை ( அதுவும் காலாவதி ஆன அடையாள அட்டை ) வைத்துக்கொண்டு காவல் சோதனை சாவடியில் இருந்து தப்பித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. தினமும் காலை வாக்கிங் வரும் போது ஏதாவது ஒரு வாகனத்தை திருடி செல்வது பின்னர் ஆக்டிங் டிரைவராக பகலில் வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்ததாக காவல் துறையினர் கூறினர்.ராஜ்குமாரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி  திருப்பூர் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: