Home /News /tamil-nadu /

பணத்துக்காக பெண் மருத்துவர் செய்த காரியம் - ஆக்‌ஷனில் இறங்கிய ஆட்சியர்

பணத்துக்காக பெண் மருத்துவர் செய்த காரியம் - ஆக்‌ஷனில் இறங்கிய ஆட்சியர்

பெண் மருத்துவர்

பெண் மருத்துவர்

கர்ப்பிணி இடம் சிகிச்சைக்காக பெறப்பட்ட தொகையை திருப்பி வழங்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    உடுமலைப்பேட்டையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருவுற்ற பெண்மணியை பணத்திற்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த அரசு மருத்துவரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி பிரசவ வலி காரணமாக மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு பகுதியை சேர்ந்த மருதமுத்து என்பவரின் மனைவி ராஜராஜேஸ்வரி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வயிற்றில் இறந்துவிட்டதாகவும் அந்த சிசு தானாக பிரசவித்து விடும் எனக் கூறி நான்கு நாட்கள் மருத்துவமனையிலேயே தங்க வைத்துள்ளார்.

    Also Read:  ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி.. சக்கரத்தில் சிக்கியதில் பலத்த காயம்

    அங்கு பணியாற்றிய பெண் மருத்துவர் ஜோதிமணி என்பவர் சிகிச்சைக்கு வந்து நான்கு நாட்கள் ஆன பிறகு குழந்தை வெளியே வராத காரணத்தால் ராஜராஜேஸ்வரி பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அவர்களை தனது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் அரசு மருத்துவர் இதற்கு கட்டணமாக ரூபாய் 37,000 பெற்றுள்ளார்.

    Also Read: ஆன்லைன் சூதாட்டத்தால் சிதைந்த குடும்பம் – மனைவி குழந்தைகளை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை

    இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவரை பணியிடை மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது முதலில் தாராபுரம் மாற்றம் செய்யப்பட்ட இவர் பிறகு கூடலுருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  இவரது நடவடிக்கை தெரிந்த கூடலூர் பகுதி மக்கள் இவர் தங்களது மருத்துவமனைக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கர்ப்பிணி இடம் சிகிச்சைக்காக பெறப்பட்ட தொகையை திருப்பி வழங்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவிட்டுள்ளார் ஆனால் அந்த பணத்தை அந்த கர்ப்பிணி தரப்பினர் பெற்றுக்கொள்ளவில்லை.

    செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Doctor, Money, Udumalaipet

    அடுத்த செய்தி