Home /News /tamil-nadu /

வீட்டில் தனியாக இருந்த ப்ளஸ் 1 மாணவி கழுத்தறுத்து கொலை.. உடுமலையில் அதிர்ச்சி சம்பவம்

வீட்டில் தனியாக இருந்த ப்ளஸ் 1 மாணவி கழுத்தறுத்து கொலை.. உடுமலையில் அதிர்ச்சி சம்பவம்

உடுமலை கொலை

உடுமலை கொலை

Udumalai | வீட்டில் தனியாக இருந்த மாணவி கழுத்து அறுக்கபட்டு இறந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உடுமலையில் வீட்டில் தனியாக இருந்த 11.ஆம் வகுப்பு பள்ளி மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை சிங்கபூர் நகர் பத்திரகாளியம்மன் லே-அவுட்டில் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் உடுமலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
    நேற்று முன்தினம் இரவு அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  மாணவியின் தாயார் பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புற வாசல் அருகே அவரது மகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

    Also Read: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கூலித்தொழிலாளி குத்திக்கொலை - கணவன் வெறிச்செயல்

    இதனையடுத்து அந்த மாணவியின் தாயார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் மாணவி இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.    திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஷாங் சாய்  மற்றும் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி தேன்மொழி வேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    பிரேதபரிசோதனை செய்த பின்புதான் கொலையா தற்கொலையா என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த மாணவி கழுத்து அறுக்கபட்டு இறந்த சம்பவம் இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Murder, Student Suicide

    அடுத்த செய்தி