முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 20 திருக்குறள், மாநிலங்களின் தலைநகர் -இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த 2 வயது குழந்தை

20 திருக்குறள், மாநிலங்களின் தலைநகர் -இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த 2 வயது குழந்தை

திருப்பூர் குழந்தை

திருப்பூர் குழந்தை

திருப்பூரைச் சேர்ந்த இரண்டரை வயதுக் குழந்தை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜனனி - நரேஷ் குமார் தம்பதியினர். இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ள சூழ்நிலையில் பிறந்து இரண்டரை வருடங்கள் ஆன இவர்களது மகள் நிஷ்மிதாஸ்ரீ தற்போது இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் 26  தலைப்புகளில் பல்வேறு தகவல்களை பேசி சாதனை படைத்துள்ளார். அதற்கான அங்கீகார சான்று, பதக்கம் மற்றும் எழுதுகோல் ஆகியவை தற்போது அவருக்கு கிடைத்துள்ளது.

தமிழில் 99 குறிஞ்சி மலர்கள் 64ஆயக்கலைகள் 20 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தும், ஆங்கிலத்தில் எழுத்துக்களை கூறும் போது அவற்றின் பெயரை பிழையில்லாமல் தெரிவிப்பதும் கணிதத்தில் 1 முதல் 200 வரையிலான எண்களை மனப்பாடமாக ஒப்பிவித்தும், நிறங்கள், வாகனங்கள், திருவிழாக்கள் மற்றும் காய்கறிகளின் போட்டோக்களை காண்பித்தால் அவற்றை தெளிவாக கூறுவது, மாநிலங்களின் பெயர்களை கூறினால் மாநிலங்களின் தலைநகரை சொல்வது என இருபத்தி ஆறு தலைப்புகளில் தனது திறமையை வெளிப்படுத்தி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் சாதனை படைத்து அதற்கான சான்றிதழை பெற்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜனனி தெரிவிக்கும்போது, ’ஆசிரியரான தான் நிஷ்மிதாஸ்ரீ  11 மாதக் குழந்தையாக இருக்கும் போதே பள்ளிக்கு எடுத்துச் சென்று மற்ற குழந்தைகளுக்கு பாடம் எடுக்க கூடிய சூழல் ஏற்பட்டதாகவும் அப்போது குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும்போது நிஷ்மிதாஸ்ரீ அதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் பின்னர் அதே ஆர்வத்தோடு வீட்டிலும் பாடங்களை சொல்லித் தர கேட்டதால் வீட்டிலும்  சொல்லித் தந்துள்ளார். நிஷ்மிதா ஸ்ரீ கற்பதில் அதிக அளவு ஆர்வம் இருந்ததை உணர்ந்து ஊரடங்கு சமயத்தில் பல்வேறு தலைப்புகளில் கற்றுக்கொடுத்த போது அவள் விரைவாக கற்றுக் கொண்டதன் பேரில் இந்தியன் புக் ஆப்  ரெக்கார்டு சாதனைக்கு விண்ணப்பித்தாகவும், அந்த முயற்சி வெற்றி அடைந்து தற்போது அதற்கான அங்கீகாரம் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘அடுத்ததாக வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்திற்கும் விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் தங்களது அடுத்த மகன் நிஷாந்தும் தற்போது ஆர்வமாக கற்று வருவதாகவும் அவரும் சாதனை படைப்பார் என்று நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் குழந்தைகள் செல்போன் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் இருக்க பெற்றோர் இதுபோன்ற பயனுள்ள விஷயங்களை முன்னெடுத்தால் ஒவ்வொரு குழந்தையும் சாதனையாளர் ஆகலாம் எனவும் தெரிவித்தார். மழலைக் குரல் மாறாத நிஷ்மிதாஸ்ரீயின் இந்த சாதனையை அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

First published: