Home /News /tamil-nadu /

4 ஏக்கரில் பயிரிட்ட தக்காளி செடிகளை டிராக்டர் ஏற்றி அழிக்கும் விவசாயி

4 ஏக்கரில் பயிரிட்ட தக்காளி செடிகளை டிராக்டர் ஏற்றி அழிக்கும் விவசாயி

திருப்பூர் விவசாயி

திருப்பூர் விவசாயி

Tirupur : ஏக்கர் ஒன்றுக்கு தக்காளி பயிரிட்டால் 1 முதல் 1.5 லட்சம் வரை செலவு ஆகும் என்கிறார் சிவக்குமார். எவ்வளவு முயற்சி செய்தாலும் அடக்க விலையை கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்.

திருப்பூரை சேர்ந்த விவசாயி தக்காளி பறித்து சந்தைக்கு கொண்டு செல்லும் கூலி கூட கிடைக்காததால் தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் அல்லாளபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். 41 வயதான இவர் இவருடைய அப்பா காலத்தில் இருந்தே விவசாய பணியை மேற்கொண்டு வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் 4 ஏக்கருக்கு தக்காளியை பயிரிட்டு அது அறுவடைக்கு தயாராக உள்ள சூழலில் கடும் நஷ்டத்தை சந்திக்க இருப்பதால் பயிரிட்ட தக்காளியை டிராக்டர் கொண்டு அழித்து வருகிறார் . தக்காளியை கொண்டு போய் விற்பனை செய்ய வேண்டும் என்றால் கைக்காசு போட்டு தான் செய்ய வேண்டும் என்பதால் மனதை தேத்திக்கொண்டு தக்காளியை பயிரிட்ட நிலத்திலேயே அழித்து வருகிறார்.

Also Read: ஆன்லைன் குளறுபடி.. மூட்டைக்கு 27 ரூவா கேட்கும் அதிகாரிகள்.. நெல் கொள்முதலில் மெத்தனம் கரூர் விவசாயிகள் கண்ணீர்

1 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட வேண்டும் என்றால் நாத்து ஒன்றுக்கு 1 ருபாய் ஆகிறது என்கிறார். நாத்து நடுவதற்கு ஆட்கள் 5 பேர் தேவைப்படும் நிலையில் அவர்களுக்கு 5 நாட்களுக்கான கூலி , பயிர் வளரும் போது சொட்டு நீர் போடுவதற்கான செலவு , அதற்கான பந்தல் அமைப்பு , அறுவடைக்கு முன்பு வரை 4 தடவை கொடுக்கும் இடுபொருளுக்கான உரத்தின் விலை , அறுவடை செய்யும் போது ஆட்கள் கூலி , அதனை தரம் பிரித்து டிப்பர் மூலம் சந்தைக்கு கொண்டு போகும் செலவு என மொத்தம் ஏக்கர் ஒன்றுக்கு தக்காளி பயிரிட்டால் 1 முதல் 1.5 லட்சம் வரை செலவு ஆகும் என்கிறார் சிவக்குமார்.

தக்காளி


15 கிலோ தக்காளி கொண்ட ஒரு டிப்பர் ஒன்று தற்போதையை நிலையில் 60 முதல் 70 ருபாய் வரை விலை போகிறது. விவசாயிகளிடம் இருந்து கிலோ ஒன்று 5 ருபாய்க்கு தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அடக்க விலையை கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கிறார். தக்காளியை பறிப்பதற்கு முன்பாகவே கடும் நஷ்டம் இருப்பதால் , அதை சந்தைக்கு கொண்டு போக மீண்டும் கையில் இருக்கும் காசை போட வேண்டியிருக்கும் என்பதால் டிராக்டர் மூலம் 4 ஏக்கரில் பயிரிட்ட தக்காளியை அழித்து வருகிறார்.

Also Read: 100 நாள் வேலை திட்டம் தொடரும் , கிராம ஊராட்சி நலத்திட்டங்களும் தொடரும் என திமுக அரசு அறிவிக்க வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை

மழைக்காலங்களின் போது தக்காளி வரத்து மிகவும் குறையும் போது மட்டுமே விலை அதிகரிக்கறது. அந்த 2 மாத காலம் தவிர அனைத்து காலங்களிலும் கடும் நஷ்டத்தை சந்திப்பதாகவே கூறுகிறார் . இது போன்ற நிலைமைக்கு பதில் தக்காளி போன்ற விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயித்து கொள்முதல் செய்தால் லாபம் இல்லாவிட்டாலும் கடும் நஷ்டங்களை தவிர்க்கலாம் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Farmers, Tamil News, Tiruppur, Tomato, Vegetable price

அடுத்த செய்தி