Home /News /tamil-nadu /

ஹாரன் அடித்தது குற்றமா.. அரசுப்பேருந்து ஓட்டுநருடன் இளைஞர்கள் தகராறு

ஹாரன் அடித்தது குற்றமா.. அரசுப்பேருந்து ஓட்டுநருடன் இளைஞர்கள் தகராறு

திருப்பூர்

திருப்பூர்

அரசு பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதையில் சாலையை மறித்தபடி நின்றிருந்த இளைஞர்களை நகர்த்த ஹாரன் அடித்த அரசு பேருந்து ஓட்டுநரை தாக்க முயன்ற மூவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செங்கப்பள்ளி நோக்கி அரசு பேருந்தை ஓட்டுநர் சிவகுமார் என்பவர் இயக்க முற்பட்டுள்ளார். அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு மது போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் சாலையை மறித்தபடி நின்று கொண்டு அரட்டை அடித்தபடி இருநாதுள்ளனர். அவர்களை நகரும் படி அறிவுறுத்த ஓட்டுநர் சிவக்குமார்  ஹாரன் அடித்துள்ளார். அதற்கு மூவரும் ‘எங்களை இடித்து விட்டு சென்று விடுவாயா’ என தகராறு செய்த படி சிவக்குமாரை தாக்க முயனறுள்ளனர்‌.

இதையும் படிங்க:  2021 ல் இளைஞர்கள் என்ன தேடினார்கள்? பிரபல ஆபாச இணையதளம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இதனை கண்ட சக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மற்றும் பயணிகள் இணைந்து மூவரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அனைவருக்கும் போக்கு காட்டிய மூவரும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால்  மூவரையும் பிடித்து பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த  திருப்பூர் தெற்கு போலீசார் மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Bus, Crime | குற்றச் செய்திகள், Govt Bus, Tirupur

அடுத்த செய்தி