முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துணிக்கடையில் பெண் செய்த காரியம் - சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

துணிக்கடையில் பெண் செய்த காரியம் - சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

திருப்பூர் துணிக்கடை

திருப்பூர் துணிக்கடை

துணிக்கடையில் புகுந்த பெண் 2000 ரூபாய் கொடுத்து பணிப்பெண்களை ஏமாற்ற முயற்சி செய்து முடியாததால் அங்கிருந்த துணிகளை திருடி சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

2000 ரூபாய் நோட்டை கொடுத்து கணக்கு குளறுபடி செய்து ஏமாற்ற முயற்சி பெண்கள் ஏமாறாததால் பாவாடையை திருடி சென்ற பெண்மணியின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் பெருந்தொழவு பகுதியை சேர்ந்த பொன்னுலிங்கம் என்பவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் இன்று காலை வழக்கம் போல பணியாளர்கள் பணியாற்றி வந்த போது துணி வாங்குவது போல் கடைக்குள் நுழைந்த பெண்மணி மற்றும் ஒரு சிறுவன் என இருவரும் கடையில்  பாவாடை உள்ளிட்ட ஆடைகளை 250 ரூபாய்க்கு வாங்கி சென்று உள்ளனர். 2000 ரூபாய் நோட்டு கொடுத்து மீதி சில்லறை பெற்று சென்ற அடுத்த சில நிமிடங்களில் வாங்கிய பொருள் வேண்டாம் என திருப்பி கொடுத்துள்ளனர்.

மேலும் அந்தப்பெண் 750 ரூபாயை திருப்பி கொடுத்து விட்டு 1000 ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் தான் கொடுத்த  2000 ரூபாய் பணத்தை தனக்கு தரவில்லை என எக்குத்தப்பாக கணக்கு பேசி கடையில் இருந்த பெண்களை குழப்பி உள்ளார். இதனால் கடையில் இருந்த பெண்கள்  முழுமையாக கணக்கு  பார்த்த போது சரியாக கொடுத்து விட்டது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடையில் பணியில் இருந்த பெண்களை ஏமாற்ற முடியாததால்  உடன் இருந்த சிறுவன் கடையில்  பணியில் இருந்த பெண்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களின் கவனத்தை திருப்பும் போது அந்த பெண்மணி ஒரு பாவாடையை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போல சென்று விடுகிறார். சிறிது நேரம் கழித்து துணியை காணாததால்  அதிர்ச்சி அடைந்த பெண்கள் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அடையாளம் தெரியாத அந்த பலே  பெண்மணி பாவாடையை திருடிச்சென்றது தெரியவந்தது.

2000, 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பொருட்களை வாங்கி பின்னர் அதனை வேண்டாம் என கொடுத்து கணக்கை குழப்பி அதிக பணம் பெற்றுச் செல்வது, அல்லது பொருட்களை திருடிச் செல்வது என்ற முறையில் திருடும்  இது போன்றவர்களிடம் பல கடைக்காரர்கள் ஏமாந்துள்ளதாக தெரிவித்து இந்த சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime News, Theft