Home /News /tamil-nadu /

கோவில் திருவிழாவில் நடனமாடிய அதிமுக எம்எல்ஏ

கோவில் திருவிழாவில் நடனமாடிய அதிமுக எம்எல்ஏ

அதிமுக எம்.எல்.ஏ நடனம்

அதிமுக எம்.எல்.ஏ நடனம்

திருப்பூர் வடக்கு அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் தீர்த்த குடம் எடுத்து கையில் வேப்பிலையுடன்,  உற்சாக நடனமாடினார்

திருப்பூரில் கோவில் திருவிழாவில் தீர்த்த குடம் எடுத்து  அதிமுக எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் நடனமாடி வந்தார்.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் பொங்கல் திருவிழா கொண்டாடுவது வழக்கம். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வது வழக்கம்.

Also Read:  ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி.. சக்கரத்தில் சிக்கியதில் பலத்த காயம்

இந்த ஆண்டு கோவில் திருவிழாவில் ஏராளமானோர் தீர்த்த குடம் எடுத்து வந்த நிலையில் திருப்பூர் வடக்கு அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் தீர்த்த குடம் எடுத்து கையில் வேப்பிலையுடன்,  உற்சாக நடனமாடினார். எம்.எல்.ஏ ஒருவர் தீர்த்த குடம் எடுத்து நடனமாடியதால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் நடனமாடிய படி தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.    மேளதாளம் வானவேடிக்கை என களைகட்டிய திருவிழாவை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து சாமி தரிசனம் செய்தனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, Festival, Temple, Tirupur

அடுத்த செய்தி