ஊரடங்கை மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களுக்கு அபராதத்துடன் கொரோனா டெஸ்ட் - திருப்பூர் காவல்துறை ஏற்பாடு

திருப்பூர்

கண்காணிப்பின் போது இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம்

  • Share this:
திருப்பூரில் இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு  காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில்  கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே காவல்துறை சார்பில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது .

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு காவல் துறை சார்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கண்காணிப்பின் போது இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்படுவதோடு  சுகாதாரத் துறை சார்பாக அவ்விடத்திலேயே கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்ட பின்னரே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது .பரிசோதனை முடிவுகள் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published: