திருப்பூரில் கைதியிடமிருந்து பணத்தை திருடிய போலீஸ் சஸ்பென்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஷாங் சாய் உத்தரவு பிறப்பித்தார்.
மருதமலை திரைப்படத்தில் போலீஸ் ஏட்டாக வரும் வடிவேலு, கைதியான போண்டா மணியின் பணத்தை திருடி செலவு செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதேபோன்ன்ற சம்பவம் ஒன்று திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடந்தேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சின்னகானூரில் உள்ள இரும்பு ஆலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரும்பு திருடிய வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர். திருட்டப்பட்ட இரும்பை வாங்கிய அன்னூரை சேர்ந்த இரும்பு வியாபாரி ஆனந்தனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: காரை நிறுத்தி கோரிக்கை மனுக்களை பெற்ற முதல்வர் ஸ்டாலின்...
அவரது ஏ.டி.எம் கார்டு, பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை பெற்ற காவலர் ரஞ்சித் அதில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். ஜாமினில் வெளியே வந்த ஆனந்தன் வங்கி கணக்கை சரி பார்த்த போது 4 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆனந்தன் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது காவலர் ரஞ்சித் பணத்தை எடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஷாங் சாய் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: நிலத்தகராறில் போலீஸின் மூக்கை கடித்த ராணுவ வீரர்...
செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.