திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களில் 150 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குட்கா தொடர்பாக வழக்கு பதிவு செய்யாத காவல் ஆய்வாளர் மற்றும் துணை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
புகையிலை இல்லாத மாநிலமாக தமிழத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் குட்கா பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. எந்த கடையிலாவது குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தார்கள் என்றால், முதலில் நோட்டீஸ் கொடுக்கப்படும். அதன்பிறகும் விற்றால் அபராதம் விதிக்கப்படும். அதனைத்தொடர்ந்து அந்த கடை மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிகமாக இளைஞர்களை பாதிக்கும் விஷயம் என்பதால், பள்ளி, கல்லூரி வாயில்கள் முன்பும், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் போன்ற பகுதிகளிலும் புகையிலை பொருட்கள் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து உருவ பொம்மைகள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த பகுதிகளில் உள்ள வணிகர்களை ஒன்றிணைத்து இதுபோன்ற ‘புகையிலை பொருட்களை விற்பனை செய்யமாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புகையிலை தொடர்பான புகார்கள் இருந்தால், பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாநகரப்பகுதிகளில் கள்ளத்தனமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், மாநகர போலீசாருடன் இணைந்து நேற்று மாலை அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் மாநகருக்குட்பட்ட பகுதிகளான ஊத்துக்குளி ரோடு, குமரன் ரோடு, மங்கலம் ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: கோவையில் சிலம்பாட்டம் பயிற்சியில் திருநங்கைகள்- சாதிக்க வாய்ப்பு தர கோரிக்கை!
இது குறித்து போலீசார் கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், குடோன்களுக்கு சீல் வைக்கப்படும்.தொடர்ந்து குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காதலித்து கர்ப்பம்: திருமணத்துக்கு முரண்டு பிடித்த காதலனை வழிக்கு கொண்டு வந்த போலீசார்!
இந்நிலையில் கடந்த மாதம் ஆண்டிப்பாளையம் சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்ட 6 கிலோ புகையிலை பொருட்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருந்த குற்றச்சாட்டில் வடக்கு காவல்நிலைய குற்ற ஆய்வாளர் ஜெய்சேகர், மத்திய காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டித்துரை இருவரையும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் வனிதா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Police, Police suspended, Tirupur