Home /News /tamil-nadu /

தகாத உறவு. கோவம்.. குடும்பத்தையே புரட்டிப் போட்ட அதிர்ச்சி சம்பவம்!

தகாத உறவு. கோவம்.. குடும்பத்தையே புரட்டிப் போட்ட அதிர்ச்சி சம்பவம்!

மனைவி கொலை

மனைவி கொலை

போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கணவரே கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.  விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.     

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
பலமுறை கூறியும் கேட்காமல் வேறு ஒருவருடன் தகாத உறவை தொடர்ந்ததாக மனைவி ப்ரியாவை,(30), அடித்துக் கொலை செய்த கணவர் விஜய் (35) கைது செய்யப்பட்டார்.  வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் நகை திருட யாரோ கொலை செய்ததாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் நடவடிக்கை.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் காமராஜ் வீதி பகுதியை சேர்ந்தவர் விஜய் (35).  அவிநாசி அருகே நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு ப்ரியா-(30) என்ற மனைவியும் ஹாசினி-(7) மற்றும் சாலினி-(6) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இன்று (ஆக. 25) விஜய்  வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார்.  ப்ரியா தனது இரு மகள்களையும் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் காலை 11.00 மணிக்கு விட்டுவிட்டு வீடு திரும்பி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  இதையடுத்து காலை 11.30 மணி முதல் பகல் 01.58 மணி வரை தனது மனைவி தனது செல்போன் அழைப்பை ஏற்காததால் சந்தேகம் அடைந்த விஜய் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைக்கு அழைத்து கடை உரிமையாளர் சித்ரா என்பவரிடம் விவரத்தை கூறியுள்ளார்.

Also read: மிக்-21 பைசன் ரக விமானம் கீழே விழுந்து நொருங்கி விபத்து!

இதையடுத்து சித்ரா விஜய் வீட்டில் சென்று பார்த்த போது சமையலறையில் ப்ரியா ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்து, விஜயிடம் தகவல் கொடுத்துள்ளார்.  இதையடுத்து தகவல் அறிந்து அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  முதற்கட்ட விசாரணையில் ப்ரியா அணிந்திருந்த  சுமார் நாலேகால் பவுன் தங்க நகைகள், காலில் அணிந்திருந்த வெள்ளி கொலுசு காணாமல் போயிருப்பதும், தாடையில் ஆழமான வெட்டுக்காயம் மற்றும் கழுத்து பகுதிகளில் லேசான காயங்களும் இருப்பது தெரியவந்தது.

இது குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட கொலையா அல்லது நகைக்காக செய்யப்பட்ட கொலையா என்பது குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.    முன்னதாக சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து மோப்பநாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.  தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர்.     இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கணவரே கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.  விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Also read:  பாம்புகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட முயன்றவருக்கு நேர்ந்த சோகம் – வீடியோ!

ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்த விஜய் அதை மறைத்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ப்ரியாவை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். விஜயின் மனைவி ப்ரியாவிற்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்து வந்ததாகவும், அவருடன் ப்ரியா அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசிவருவதாகவும் இதை கண்டித்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது.  மேலும், அவ்வப்போது மது போதையில் இந்த விவகாரம் குறித்து விஜய் தனது மனைவி ப்ரியாவை அடித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல பணிக்கு சென்ற விஜய் தொடர்ந்து பல முறை தனது மனைவி ப்ரியாவிற்கு செல்போனில் அழைத்துள்ளார்.   சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக ப்ரியா யாரிடமோ செல்போனில்  பேசிக்கொண்டிருந்துள்ளார்.  அப்போது விஜய்-ன் அழைப்பு, கால் வெய்டிங்கில் வந்தும் ப்ரியா எடுக்காமல் அலட்சியமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய், பணியிலிருந்து பர்மிசன் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து ப்ரியாவுடன் சண்டையிட்டு அவரை கல்லால் ஆன பூரிக்கட்டையின் அடிப்பகுதியால் தாடையில் தாக்கியுள்ளார், தொடர்ந்து மிகுந்த கோபத்தில் அருகிலிருந்த துண்டு, பெல்ட் ஆகியவற்றால் ப்ரியாவை கழுத்தை இருக்கியும் சாகாததால் கைகளால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

Also read:  தாலிபான்களால் சுடப்பட்ட நிகழ்வை 9 ஆண்டுக்கு பிறகு நினைவுகூர்ந்த மலாலா!

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட விஜய் உடனடியாக திட்டமிட்டு, ப்ரியா அணிந்திருந்த நகைகளை கழட்டி எடுத்துக்கொண்டு வெளியில் சென்று தனது பைக்கின் சீட்டுக்கடியில் நகைகளை பதுக்கிவிட்டு மீண்டும் பணிக்குச் சென்று, அங்கிருந்தபடி வீட்டின் அருகிலிருந்த மளிகை கடைக்கு போன் செய்து மனைவியை வீட்டில் பார்க்க சொல்லி அதன் பிறகு மனைவி இறந்த தகவல் தெரிந்ததுபோல் மீண்டும் வீட்டுக்கு வந்து அனைவர் முன்னிலையிலும் ஒன்றும் தெரியாதவர் போல அழுது நாடகமாடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீசாரின் தீவிர விசாரணையை அடுத்து உண்மை தெரியவந்ததையடுத்து விஜயை போலீசார் கைது செய்து 4 சவரன் நகைகள் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.    மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல கணவர் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Published by:Arun
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Murder

அடுத்த செய்தி