காங்கேயம் நகராட்சித் தலைவர் பதவி
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து 15 கவுன்சிலர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து தலைமறைவாகியுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 22ம் தேதி எண்ணப்பட்டது. இதில், அதிமுக இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
திமுக சார்பில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென் மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா... ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருடன் சந்திப்பா?
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளில் திமுகவும், 4 வார்டுகளில் அதிமுகவும், 3 வார்டுகளில் சுயேட்சைகளும் ஒரு வார்டில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹேமலதா விற்கு நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த திமுக,அதிமுக, சுயேட்சை உள்ளிட்ட கவுன்சிலர்கள் 15 பேர் தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைவரும் பொள்ளாச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.