Home /News /tamil-nadu /

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 28 படுக்கைகளுடன் ஒமைக்ரான் வார்டு தயார்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 28 படுக்கைகளுடன் ஒமைக்ரான் வார்டு தயார்

திருப்பூர்

திருப்பூர்

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு தனியாகவும் அதில் ஒமைக்ரான் தொற்று பாதித்த நபர்களுக்கு புதிய வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 படுக்கைகள் கொண்ட ஒமைக்ரான் வார்டு  அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய வகையான ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில் பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமைக்ரான் தொற்று ஏற்பட்ட நபர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக 28 படுக்கைகள் கொண்ட வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆக்சிஜன் வசதி மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    Also Read:  தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.. கட்டாய கொரோனா பரிசோதனை.. தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை

    கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு தனியாகவும் அதில் ஒமைக்ரான் தொற்று பாதித்த நபர்களுக்கு புதிய வார்டு எனவும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவத்துறையினர் சிகிச்சை அளிக்க மற்றும் கடுமையான சூழல்களை எளிதாக எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Corona positive, Corona Vaccine, Covid-19 vaccine, Omicron, Tirupur

    அடுத்த செய்தி