ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மனைவியை தங்கையாக்கி வடிவேலு ஸ்டைலில் டீலிங் - லட்சங்களை சுருட்டிய தம்பதி.. ஏமாந்த பேக்கரி கடைக்காரர்

மனைவியை தங்கையாக்கி வடிவேலு ஸ்டைலில் டீலிங் - லட்சங்களை சுருட்டிய தம்பதி.. ஏமாந்த பேக்கரி கடைக்காரர்

திருப்பூர் மோசடி

திருப்பூர் மோசடி

தங்கையை வைத்து பேக்கரி வாங்கிய வீரபாகு என்ற வடிவேலு பட காமெடியை மெய்யாக்கிய திருப்பூர் கணவன் மனைவி.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இன்ஸ்டாகிராமில் மனைவியை தங்கையாக நடிக்க வைத்து பேக்கரி நடத்தலாம் என 7.50 லட்சம் மோசடி. கர்பத்திற்கு பணம் சரியா போச்சு என்றதால் பதறி போன தம்பதி பல்லடம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா 25. கூலி தொழிலாளியான இவருக்கு முத்துச்செல்வி என்ற மனைவியும் விஜிட் விஜய் 3,வெற்றிமாறன் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.கூலி தொழிலாளியான கார்த்திக் ராஜா தான் சேமித்த பணத்தைக்கொண்டு மேலும் 3 பேருடன் கூட்டாக தேனி பகுதியில் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

கார்த்திக் ராஜாவுக்கு சமூகவலை தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றில் அதிக நாட்டம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த வருடம் டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் பல்லடம் அருகே இடுவாய் பாரதிபுரத்தை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பரஸ்பரம் காதலை வளர்த்துள்ளனர். பின்னர்  சத்யாவின் சகோதரர் என்று டேவிட் பிரசாத் அறிமுகமாகி உள்ளார்.

Also Read:  சென்னை டிராபிக் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த வடமாநில ஓட்டுநர்..

தங்களது குடும்ப விவரங்கள் செய்து வரும் தொழிலில் வருமானம் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டதாக தெரிய வருகிறது. பின்னர் தங்களது பகுதியில் பேக்கரி ஒன்று குத்தகைக்கு இருப்பதாகவும் அதனை நாம் இருவரும் சேர்ந்து எடுத்து நடத்தினால் லட்சக்கணக்கில் லாபம் கொட்டும் என்று கூறியுள்ளார். மேலும் இடுவாயிலுள்ள ஒரு பேக்கரியை வளைத்து வளைத்து தனது செல்போனில் வீடியோவாக படம்பிடித்த டேவிட் பிரசாந்த் அதனை கார்த்திக் ராஜாவின் வாட்ஸ்அப் க்கு அனுப்பி வைத்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து டேவிட் பிரசாந்தின் வார்த்தைகளை உண்மை என நம்பி கடந்த சில மாதங்களாக டேவிட் பிரசாந்தின் வங்கிக் கணக்கிற்கு இதுவரை ரூ 7 லட்சத்து 65 ஆயிரம் வரை பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பலமுறை பணம் அனுப்பிய நிலையில் எந்த ஒரு ஆவணங்களும் கொடுக்கப்படாததால் சந்தேகமடைந்த கார்த்திக் ராஜா டேவிட் பிரசாந்துக்கு சொல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடம் வந்து  பார்த்தபோது இவர்கள் சொன்ன கடை வியாபாரம் நடைபெற்று வந்துள்ளது கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

Also Read: கஞ்சா போதையில் அக்கா கணவரை அடித்தே கொன்ற தம்பி -சேலத்தில் நடந்த பயங்கரம்

இதுகுறித்து விசாரித்த போது  டேவிட் பிரசாத் கடை நமக்காக ஒதுக்கப்பட்டு விட்டது என்றும் மேலும் 3 லட்சம் கொடுத்தால் உடனடியாக கடை நமது வசமாகிவிடும் என மேலும் 3 லட்சத்திற்கு அடி போட்டு பேசி  அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அடுத்தடுத்த நாட்களில்  கார்த்திக் ராஜா தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனதால் நேரடியாக பல்லடம் வந்து பார்த்துள்ளார். அப்போது சத்யா, டேவிட் பிரசாத் இருவரும் இருந்த வீடு பூட்டி இருந்துள்ளது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை அல்ல கணவன் மனைவி என்று அறிந்து அதிர்ந்து போனார்.

தனது காதலி என நினைத்தால் அது தன்னை ஏமாற்றியவர் மனைவி என்பதும் இருவரும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றி விட்டதை நினைத்து நொந்து போன கார்த்திக்ராஜா சூலூர் செங்க துறையில் குடியிருந்து வரும் தனது மனைவி முத்துச்செல்வியின் தாய்மாமா மூக்கையாவிடம் தாங்கள் ஏமாற்றப்பட்ட  விவரங்களைக் கூறி தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரோ  டேவிட் பிரசாந்திடம் பேரம் பேசி 2 லட்சம் மட்டும் கொடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என தனது உறவினர்களையே ஏமாற்றி உள்ளார்.

Also Read: ஒரே இரவில் 25 கடைகளில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்கள்.. போலீசில் சிக்கியது எப்படி?

இதுகுறித்து பணத்தை பறிகொடுத்த கார்த்திக் ராஜாவின் மனைவி முத்துலட்சுமி கூறுகையில் தனது கணவருக்கும் இடுவாய் பெண் சத்யாவுக்குமான முகநூல் நட்பு தனக்கு தெரியும் என்றும் பேக்கரி கடையில் பார்ட்னர்  ஆகவே பணம் கொடுத்ததாக கணவன் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். தற்போது இந்தப் பிரச்சனையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பொழுது தங்களை ஏமாற்றிய சத்யாவின் கற்பத்திற்கு  எனது கணவன் தான் காரணம் என்றும் அதற்கு 7.50 லட்சம் சரியாக போய் விட்டது என கூறியதாகவும் ஆனால் தனது கணவர் அவரை நேரில் பார்த்தது கூட இல்லை என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அபாண்டமாக பழி போடுவதுடன் பணத்தை கேட்டு வந்தால் போலீசில் பொய் புகார் கொடுத்து சிக்கவைத்து மானத்தைக் கெடுத்து விடுவேன் என்று அவர்கள் மிரட்டி வருவதாகவும் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக பல்லடம் டி‌.எஸ்.பி அலுவலகத்தில் தங்களை ஏமாற்றிய கணவன் மனைவி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். வடிவேலு சினிமா பட காமெடியில் தான் அக்காவை வைத்து பேக்கரி நடத்திவருவதாக காமெடி சீன் வரும் அதேபோன்ற சம்பவம் மனைவியையே பேஸ்புக் மூலம் தங்கையாக நடிக்க வைத்து பேக்கரி வைக்கலாம் என  பணத்தை பறித்த சம்பவம் இப்பகுதியினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Arrest, Crime News, Fraud, News On Instagram