ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

3 கோடி பேரம்.. இன்னோவா காருடன் கடத்தப்பட்ட ரைஸ்மில் அதிபர் மகன் - கடத்தல்காரர்கள் போலீசில் சிக்கிய பின்னணி

3 கோடி பேரம்.. இன்னோவா காருடன் கடத்தப்பட்ட ரைஸ்மில் அதிபர் மகன் - கடத்தல்காரர்கள் போலீசில் சிக்கிய பின்னணி

தொழிலதிபர் மகன் கடத்தல்

தொழிலதிபர் மகன் கடத்தல்

பணம் தராவிட்டால் மகனை கொன்று விடுவோம் என மிரட்டியதால், அவர்களுக்கு பயந்து, 3 கோடி ரூபாயை திண்டுக்கல் பைபாசில் வைத்து கொடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருப்பூர் அருகே தொழிலதிபரை கடத்தி ரூ.3 கோடி பணம் பறித்த வழக்கில்,  அந்த கும்பலை இயக்கிய தலைவர் உட்பட 2 பேர் கிருஷ்ணகிரியில்  கைது  செய்யப்பட்டுள்ளனர். 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த காடையூர் பகுதியை சேர்ந்தவர்  சிவபிரதீப், தன் தந்தை ஈஸ்வர மூர்த்தியுடன் சேர்ந்து அப்பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். நேற்று புதிதாக கட்டி வரும் ரைஸ் மில் கட்டுமான பணிகளை பார்த்துவிட்டு தன் இன்னோவா காரில் சிவபிரதீப் வீட்டிற்கு திரும்பியுள்ளார். காரை அவரது டிரைவர் சதாம் ஓட்டியுள்ளார்.  அப்போது காரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் டிரைவரையும், பிரதீப்பையும் தாக்கி காருடன் அவர்களை கடத்தியுள்ளது. அவர்களது காருக்கு பின் டாடா சுமோவில் மூன்று பேர் கும்பல் பின் தொடர்ந்தும் வந்துள்ளனர்.

Also Read:  ஜாமீன் வழங்க முடியாது – நடிகை மீரா மிதுன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சிவபிரதீப்பின் தந்தை ஈஸ்வர மூர்த்தியிடம், 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், பணம் தராவிட்டால் அவரது மகனை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியதால், அவர்களுக்கு பயந்து, 3 கோடி ரூபாயை திண்டுக்கல் பைபாசில் வைத்து நேற்று இரவு, கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல், சிவ பிரதீப், அவரது டிரைவர் சதாம் ஆகியோரை விட்டுவிட்டு டாடாசுமோ காரில் தப்பியது. இதுகுறித்து சிவபிரதீப் காங்கேயம் போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னை இன்னோவா காரில் கடத்திய கும்பல் பேசியதை வைத்து, ஜாபர் சாதிக், அகஸ்டின், பாலன், பாலாஜி, சக்திவேல், சையத் அகமதுல்லா மற்றும் ஒருவர் இருந்ததாகவும், கடத்தல் கும்பல் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Also Read: முதலிரவு அறையில் ரகசிய கேமரா.. வீடியோவை காட்டி மாப்பிள்ளையை மிரட்டி பணம் பறிப்பு - கேரள பெண்கள் கைது

அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட போலீசார் கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவுப்படி, டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இன்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் ரோந்து சென்ற போலீசார் அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் டாடா சுமோ காரில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த பசீர் என்பதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோவை ஓட்டி வந்தவர் எனவும் கூறினான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கொண்டு அவனை விசாரித்ததில்  இந்த கடத்தல் கும்பலை வழிநடத்தியது கிருஷ்ணகிரி பழையபேட்டை  முகமது கவுஸ் சாகிப் பாய் தெருவை சேர்ந்த சையத் அகமதுல்லா என்பதும் தெரியவந்தது .பசீரை கைது செய்த போலீசார்  அவரிடமிருந்து, 20 லட்சத்து 44 ஆயிரம் ரொக்கம், டாடாசுமோ கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருப்பூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் இன்று மாலை இந்த கும்பலை வழிநடத்திய சையத் அகம்துல்லாவை கைது செய்தனர் .

இதேபோல திருப்பூர் மாவட்ட போலீசார் எட்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் மதுரையில் பதுங்கியிருந்த சக்திவேல், அகஸ்டின், மற்றும் பாலாஜி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து, 1 கோடியே 69 லட்சத்து, 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் மற்றும் பாலன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: ஆ.குமரேசன் (கிருஷ்ணகிரி) 

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Arrest, Crime News, Kidnap, Kidnapping Case, Police