திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உறவினர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என பழகி 8 மாதம் கர்ப்பமாக்கிய எலக்ட்ரீசியனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமபட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னசாமி மகன் கருப்புசாமி ( வயது 22 ). இவருக்கும் மூலனூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில் இருக்கும் உறவினரின் மகளை காதலித்து வந்துள்ளார். 17வயது சிறுமியிடம் திருமணம் செய்துக்கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்காரணமாக சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமி வயிற்றுவலியின் காரணமாக கடுமையாக அவதிப்பட்டுள்ளார். வலி அதிகமானதையடுத்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மூலனூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைக்கேட்ட அவரது தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அரசு மருத்துவர் மூலனூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மூலனூர் காவல் ஆய்வாளர் செல்வம் எலக்ட்ரிஷன் கருப்புசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இச்சம்பவம் குறித்து ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அவரை தாராபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு குற்றவியல் நீதிபதி உத்தரவின் கீழ் போக்சோ சட்டத்தின்கீழ் கருப்புசாமியை கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.