நூல் விலை உயர்வால் திணறிவரும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்!

பின்னலாடை நிறுவனங்கள்

  • Share this:
நூல் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளதால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள  திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், தங்களது அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் இந்திய அளவில் பின்னலாடை உற்பத்தியின் தலைநகராக விளங்குகிறது. பின்னலாடை ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு  26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் டாலர் சிட்டியாக திருப்பூர் உள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பின்னலாடையில் 60 சதவீத பின்னலாடை திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பூரில் தயாராகும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் ஆர்டர்கள் வரத் துவங்கி உள்ள நிலையில் நூல் விலை உயர்வு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிலோ நூல்  220 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 320, 330 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக வெளிநாடுகளில் இருந்து பெற்ற ஆர்டர்களை முடித்து கொடுக்கும் போது பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும்  இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 3 மாதத்தில் 5.49 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்


புதிதாக பெறும் ஆர்டர்களுக்கு விலை உயர்த்தும் பட்சத்தில் வெளிநாட்டு வர்த்தகர்கள் நமது போட்டி நாடுகளான சீனா, வியட்நாம், கம்போடியா, பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கு தங்கள் ஆர்டர்களை மாற்றி கொடுக்கும் அபாயம் உள்ளதால் ஆர்டர்களை இழக்க நேரிடும் என ஏற்றுமதி நிறுவனங்கள் தவித்து வருகின்றனர்.



மேலும் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள ஆர்.ஓ.டி.டி.இ.பி எனும் ஏற்றுமதி மானியம் மூலம் நூல் ஏற்றுமதிக்கு கிலோ ஒன்றிற்கு 10 ரூபாய் மானியம் கிடைக்கும் என்பதால் நூல் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் தருவதால் உள்நாட்டு தேவைக்கு ஈடான நூல் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் வரும் நாட்களில் நூல் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: கீழடியில் நாட்டியம் ஆடி, பெருமை கூறி மகிழ்ந்த பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்


அதே போல் இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு, பருத்தி பதுக்கல் உள்ளிட்ட காரணிகளும் பின்னலாடை துறையை பாதித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து  மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தி, உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும், பொருளாதாரம் மேம்படும் எனவும் மூலப்பொருட்களுக்கான சர்வதேச விலையை அரசே நிர்ணயம் செய்து ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Published by:Murugesh M
First published: