Home /News /tamil-nadu /

ஊரடங்கு அச்சம்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் திருப்பூர் வடமாநில தொழிலாளர்கள்

ஊரடங்கு அச்சம்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் திருப்பூர் வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூர் தொழிலாளர்கள்

திருப்பூர் தொழிலாளர்கள்

பொங்கல் விடுமுறை10 நாட்கள் வரை பனியன் நிறுவனங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுபாடுகள் அதிகரித்து  ரயில் சேவை  நிறுத்தப்படுமோ என்ற அச்சம் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது

    ஊரடங்கு அச்சம் மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறை  காரணமாக ரயில் முன்பதிவு செய்ய வடமாநில தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் சொந்த ஊருக்கு செல்ல வடமாநில தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுவதால் ரயில் நிலையம் வடமாநில தொழிலாளர்களால் நிறைந்து காணப்படுகிறது.

    திருப்பூர் பனியன் நிறுவனங்களில் சுமார் 4 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு கொரோனா அலையின் போதும் பனியன் நிறுவனங்கள் இயங்காமல் சொந்த ஊருக்கு செல்ல ரயில் சேவையும் இல்லாமல் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். பலர்  தங்கள் மாநிலத்திற்கு நடை பயணமாகவே சென்றனர்.

    இதன்பிறகு தமிழக அரசு மற்றும் தொழில் துறையினர் வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர். தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் பொங்கல் விடுமுறையும் 10 நாட்கள் வரை பனியன் நிறுவனங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுபாடுகள் அதிகரித்து  ரயில் சேவை  நிறுத்தப்படுமோ என்ற அச்சம் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதன் காரணமாக  தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். முன்பதிவு மையத்தில்  வடமாநில தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் திருப்பூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிக்க வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதால திருப்பூர் ரயில் நிலையம் வடமாநில தொழிலாளர்களால் நிறைந்து காணப்படுகிறது.

    இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு- 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.. மாடுபிடி வீரர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்


    இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், பொங்கல் விடுமுறை 10 நாட்கள் என்பதால்  சொந்த ஊருக்கு செல்வது வழக்கமான ஒன்று என்றாலும் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படுமோ என்ற அச்சமும், விடுமுறையில் வேலையும் இல்லாமல் ரயில்களும் தடை செய்யப்பட்டால் மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ரயில் முன்பதிவு செய்து சொந்த ஊருக்கு செல்வதாகவும் மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பின்னர் பணிக்கு வருவோம் என தெரிவித்தனர்.

    மேலும் படிங்க: Booster Dose: கொரோனா பூஸ்டர் தடுப்பூசி - பொதுமக்கள் ஆர்வம்


    நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் தொழிலாளர்கள் வெளியேறினால் மீண்டும் இவர்களை அழைத்து வருவது முடியாத காரியமாகி விடும். எனவே தொழிலாளர்கள் தாங்கள்  பணி செய்யும் இடங்களிலேயே இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு மற்றும் தொழில் துறையினர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை கடந்த முறை  செய்தது போல மீண்டும் உதவ வேண்டும் எனவும் தொழிலாளர்கள் பதட்டம் அடையாமல் திருப்பூரில் தங்கி இருக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து ரத்தினம் தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Lockdown, Tiruppur

    அடுத்த செய்தி