Home /News /tamil-nadu /

திமுக கொடுத்த 517 தேர்தல் வாக்குறுதியில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை - அண்ணாமலை

திமுக கொடுத்த 517 தேர்தல் வாக்குறுதியில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தால் மாநில அரசும் எதுவும் கொடுக்காது. மத்திய அரசும் எதுவும் கொடுக்காது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

    சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த 517 வாக்குறுதிகளில்7 வாக்குறுதிகளை கூட அக்கட்சி நிறைவேற்றவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    திருப்பூர் மாநகராட்சி 56 வது வார்டில் ப.ஜ.க சார்பில் போட்டியிடும் காடேஸ்வரா தங்கராஜை ஆதரித்து செரங்காடு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, வேட்பாளர் தகுதி வாய்ந்த நபரா என்ற பார்க்க வேண்டும். நமக்கான வேலைகளை செய்வாரா என்று பார்க்க வேண்டும்.

    தமிழகத்தில் 8 முனைப்போட்டி நிலவுகிறது. குறிப்பாக 3 கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மத்தியில் பா.ஜ.க கட்சி ஆட்சியில் உள்ளது. மாநிலத்தில் திமுக உள்ளது. உள்ளாட்சி திட்டம் கூட மத்திய அரசிடம் இருந்து தான் பணம் வருகிறது. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் ஊழல் இல்லாமல் வந்து சேர வேண்டும் என்று தான் பா.ஜ.க தனியாக களம் காண்கிறது.

    ஸ்மார்ட் சிட்டி ஆரம்பித்த பிறகு கூட இப்போது வரை அனைத்து திட்டங்களும் பாதியாக தான் உள்ளது. 30% கமிஷன் என்ற முறையை மாற்றியமைக்கவே பா.ஜ.க தனித்து நிற்கிறது. திமுக வின் 8 மாத ஆட்சி 8 வருட ஆட்சி போல சலிப்பு தட்டியுள்ளது. பொங்கல் தொகுப்பு யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஊட்டியில் கெமிக்கல் போட்ட வடமாநில பகுதியில் இருந்து வாங்கப்பட்ட , யாரும் சாப்பிட முடியாத வெல்லத்தை நமக்கு கொடுத்துள்ளார்கள். பொங்கல் தொகுப்பில் வாங்கிய மஞ்சள் பையின் விலை 60 ரூபாய். அதில் 50 ருபாய் கமிஷன். கரும்பிலும் ஊழல் நடந்துள்ளது.

    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு நப்பாசை... உள்ளாட்சி தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாடம் கற்பிக்கும் - செல்லூர் ராஜூ


    2 கோடி பேர் ஓட்டு போடும் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு கேட்க பயந்துகொண்டு முதல்வர் வெளியில் வராமல் உள்ளார். 1000 ருபாய் மாத ஊக்க தொகைதொகை என்னாச்சு ? நகை கடன் தள்ளுபடி என்னாச்சு ? என மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். 517 தேர்தல் வாக்குறுதியில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்று பேசினார்.

    மேலும் படிக்க: கோவையின் முதல் பெண் மேயர் யார்.. கட்சிக்குள்ளும், வெளியிலும் நிலவும் போட்டி


    மேலும், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளது. தமிழக கம்யூனிஸ்ட் ஐ.சி.யு வில் படுத்துள்ளது. ஆக்சிஜன் திமுக கொடுக்கின்றது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தால் மாநில அரசும் எதுவும் கொடுக்காது. மத்திய அரசும் எதுவும் கொடுக்காது. கம்யூனிஸ்ட் கட்சிக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு உழைக்க நல்ல தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது இல்லை என்று அவர் கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, BJP, Local Body Election 2022, Tiruppur

    அடுத்த செய்தி