• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீளும் பொருளாதாரம்: திருப்பூரில் தீபாவளியை முன்னிட்டு குவியும் ஆர்டர்கள்!

மீளும் பொருளாதாரம்: திருப்பூரில் தீபாவளியை முன்னிட்டு குவியும் ஆர்டர்கள்!

திருப்பூர் பின்னலாடை தொழில்

திருப்பூர் பின்னலாடை தொழில்

உள்நாட்டு வர்த்தகர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடைகளை வாங்கி இருப்பு வைக்க முனைவதால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிய துவங்கி உள்ளது.

  • Share this:
கொரோனா தொற்று காரணமாக திருப்பூரில் பின்னலாடை வர்த்தம் முடங்கிய நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை காரணமாக மீண்டும் ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பின்னலாடை நகரமான திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக அளவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தால் வர்த்தகம் பெருமளவு  சரிவை சந்தித்தது. தற்போது இரண்டாவது அலையை கடந்து இயல்பு நிலை திரும்பி  வரக் கூடிய சூழ்நிலையில், திருப்பூர் பின்னலாடை துறை ஏறுமுகமாக பயணிக்க துவங்கி உள்ளது.

உள்நாட்டு வர்த்தகர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடைகளை வாங்கி இருப்பு வைக்க முனைவதால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிய துவங்கி உள்ளது. அதே போல் வெளிநாடுகளிலும் குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்களும் வந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில் வரும் பண்டிகை காலம் மூலம் ஏராளமான ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் பின்னலாடை துறை வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.  கொரோனா வைரஸ்  கடந்த இரண்டு அலைகளிலும் பின்னலாடை துறைக்கு  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் மூன்றாவது அலை வருமோ என்ற அச்சத்தை காட்டி வந்த சூழலில் பலர் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதால் மூன்றாவது அலை அச்சம் நீங்கி திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இதையும் படிங்க: ஜவ்வரிசி உற்பத்தியில் சேலத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி


வருகின்ற பண்டிகை காலங்கள் பின்னலாடை துறைக்கு உறுதுணையாக உள்ளது. அதையொட்டி பல ஆர்டர்கள் வர இருக்கின்றன.  திருப்பூர் பின்னலாடை துறையை பொருத்தவரை பண்டிகை காலங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நீண்ட நாட்கள் விடுமுறைக்கு செல்லும் பழக்கம் உள்ளது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் என்றால் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாத காலம் வரை ஆட்கள் விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் பழக்கம் உள்ளது.

ஆனால் இந்த முறை தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் விடுமுறை விட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் கண்டெய்னர் பற்றாக்குறையும் நிலவி வரக்கூடிய சூழ்நிலையில், புதிய ஆடைகளை விரைவில் தயார் செய்து அனுப்ப வேண்டும். எனவே அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு விடுமுறையை தவிர்த்து வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக பேரிடர் மேலாண்மை திட்டம் : தமிழக அரசு நடவடிக்கை


இதேபோல் வங்கதேச தொழிலாளர்கள் அதிக அளவில் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருவதாக கூறும் அவர், நிறுவனங்கள் புதிதாக சேர்கின்ற ஆட்களின் ஆதார் கார்டு பார்த்து காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதாகவும்  அது அசலா இல்லை போலியா என்பதை கண்டறிய தொழில் துறையினரிடம் தொழில்நுட்பம் இல்லை, வரும் காலத்தில் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: