Home /News /tamil-nadu /

கந்து வட்டி கும்பல் போல் செயல்பட்ட வங்கி அதிகாரிகள் ... விசைத்தறி உரிமையாளரின் மனைவி தற்கொலை முயற்சி

கந்து வட்டி கும்பல் போல் செயல்பட்ட வங்கி அதிகாரிகள் ... விசைத்தறி உரிமையாளரின் மனைவி தற்கொலை முயற்சி

திருப்பூர் வங்கி

திருப்பூர் வங்கி

Tiruppur District : வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத விசைத்தறி உரிமையாளரின் வீட்டிற்குச் சென்று வங்கி அதிகாரிகள் மிரட்டியதாக புகார். கந்து வட்டி கும்பல் போல் செயல்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசைத்தறியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. அவருக்கு வயது 52. மாற்றுத்திறனாளியான இவர் தனது மனைவி ஜோதிமணி மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோருடன் குடியிருந்து கொண்டு விசைத்தறி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு விசைத்தறி தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கோவிந்தசாமி தனக்குச் சொந்தமான 60 சென்ட் விவசாய நிலத்தை அடமானம் வைத்து ரூ 50 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதனைத்தொடர்ந்து விசைத்தறி தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் கொரோனா கால ஊரடங்கு தடையின் காரணமாக வங்கியில் பெற்ற கடனின் தவணைத் தொகை செலுத்த வழியின்றி கோவிந்தசாமியின் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்ததாக கூறப்படுகிறது.

    கோவிந்தசாமி பெற்ற 50 லட்சம் வங்கிக் கடனுக்கு வட்டி, அபராத வட்டி, மீட்டர் வட்டி என கந்துவட்டி போல கணக்கிட்டு 65 லட்சம் வரை கடனை திருப்பி செலுத்த வேண்டும் எனக்கேட்டு வங்கி ஊழியர்கள் பலமுறை கோவிந்தசாமியின் விசைத்தறி கூடத்திற்கும் வீட்டுக்கும் சென்று அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.



    இதனிடையே இம்மாதம் 4.3.22 அன்று பல்லடம் வடுகபாளையம் பேங் ஆப் இந்தியா வங்கி கிளையின் மேலாளர் நக்கீரன் மற்றும் ஊழியர் நிர்மல் பிரபு, நடவடிக்கை அதிகாரி ரமேஷ் ஆகிய மூவரும் கோவிந்தசாமியின் குடோனுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கோவிந்தசாமியின் மனைவி ஜோதிமணியிடம் தரக்குறைவாக பேசி திட்டி மிரட்டியதோடு கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் கடன் வாங்குவதை விட செத்துப் போக வேண்டியது தானே என்றும் மிரட்டிவிட்டு சென்றதோடு கோவிந்தசாமியின் விசைத்தறி கூடத்திற்கு மூலப்பொருளான பாவு நூல் வழங்கும் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு மிரட்டி அதன்பேரில் அந்நிறுவனத்தினர் கோவிந்தசாமிக்கு தெரியாமல் நூல்களை எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.



    இதனால் மனமுடைந்த கோவிந்தசாமியின் மனைவி ஜோதிமணி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று விசைத்தறி கூடத்திற்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது மகன் சண்முகசுந்தரம் தாயின் நிலை கண்டு பதறி அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.

    அங்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜோதிமணியின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.



    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோவிந்தசாமி உறவினர்கள் கூறுகையில் பல்லடம் வட்டத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் மேலாளர் நக்கீரன் உள்பட மூன்று பேர் வங்கி கடனை வசூலிக்க தனது மனைவியை ஜோதி மணியை தரக்குறைவாக திட்டி மிரட்டியதோடு விசைத்தறிகளுக்கு தேவையான பாவு நூலை வழங்கும் நிறுவனத்தையும் தொடர்பு கொண்டு மிரட்டி குடோனில் இருந்த பாவு நூல்களை ஜவுளி நிறுவனம் எடுத்து சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

    ALSO READ |  அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக கட்டண வசூல் - விவசாயிகள் வேதனை
     இதனால் மனமுடைந்து ஜோதிமணி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதற்கு காரணமான பல்லடம் வடுகபாளையம் பேங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளர், ஊழியர்கள் உள்பட 3 பேர் மீதும் காமநாயக்கன்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


    செய்தியாளர் : பாலாஜிபாஸ்கர், திருப்பூர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tiruppur

    அடுத்த செய்தி