கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்களுக்கு கடந்த 26-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. பசியின்மை ஏற்பட்டதுடன், சில நேரங்களில் இருமல் பாதிப்பும் இருந்தது. இதையடுத்து, பூங்காவில் உள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகள் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மேலும், மூக்கு சளி மற்றும் குடல் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய்களுக்கான தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 9 வயதான நீலா என்ற பெண் சிங்கம், நேற்று இரவு 6.15 மணிக்கு உயிரிழந்தது. அந்த சிங்கத்துக்கு நேற்று முன்தினம் முதல் சளி வெளியேறியதாகவும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து
9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்காவிலுள்ள விலங்குகளைப் பாதுகாப்பது தொடர்பாக நிர்வாகத்தினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில் திருப்பூரில் தெருநாய்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விஜயாபுரம், பழனியம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் திடீர் மூச்சிரைப்புடன் சுற்றித்திரிகின்றன. பல நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உள்ளூர் மக்களே இறந்த நாய்களை அப்புறப்படுத்துவதாகவும் மக்கள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.