திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது ஈசல் தட்டு மலை கிராமம் இங்கு சுமார் 250.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். உடுமலை ஜல்லிப்பட்டி அடுத்து கொங்கு கொட்டை மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் செங்குத்தான மலைப்பகுதியில் உள்ள இந்த மலைவாழ் கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லையென அப்பகுதி மக்கள்
குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் இந்த செங்குத்தான கரடுமுரடான மலைப்பாதையில் பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுதான் மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
இந்நிலையில் தற்போது ஈசல் தட்டுத்தட்டு கிராமத்தில் வசித்து வரும் முருகன் என்பவரது மனைவி மாயம்மாள் 44 என்பவருக்கு இன்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இறந்தவரை அங்குள்ள மலைவாழ் மக்கள் உதவியோடு துணியால் தொட்டில் கட்டி அதில் மாயம்மாளை படுக்க வைத்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் செங்குத்தான கரடுமுரடான மலைப்பாதையில் ஆபத்து நிறைந்த புலி,சிறுத்தை,கரடி,யானை என வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள மலைப்பாதையில் கொண்டு சென்றனர்..
ராமேஸ்வரத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு.. பிளாஸ்டிக் ஒழிப்பில் அதிரடி காட்டிய அதிகாரிகள்..
நீண்ட நேரம் கழித்து மலைப்பாதையில் இருந்து தொட்டில் கட்டி கொண்டுவரப்பட்ட மாயம்மாளை ஜல்லிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்..
எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் இங்கு உள்ள மலை வாழ் மக்களின் பரிதாப நிலையை பார்த்து தமிழக அரசு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வயதியும் செய்து தர வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஈசல் தட்டு செட்டில்மெண்ட் பகுதிக்கு சாலை வசதி அமைத்துத் தர வேண்டுமெனவும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர்கள் செவிலியர்கள் மாதம் ஒரு முறையாவது எங்கள் கிராமத்துக்கு வந்து முகாம் அமைத்து மக்களை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு வேண்டுகோளாக உள்ளது..
செய்தியாளர் : ம.சக்திவேல்..பொள்ளாச்சி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.