திருப்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் முத்தனம் பாளையம் அடுத்துள்ள தீரன் சின்னமலை நகரில் நேற்றைய தினம் தமிழக அரசின் 1918 எண் கொண்ட டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறாகவும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் திறக்கப்பட்ட மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் முத்தணம்பாளையம் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்தனர். டாஸ்மாக் மதுபான கடையை அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூறினர்.
Also read... மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் ரூ. 25,000 வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
இதனால் முத்தணம்பாளையம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்களில் ஒருவர் மயக்கமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.