தாராபுரம் : கொள்ளையடிக்க போட்ட பிளான் சொதப்பல்... தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த மக்கள்

கைதானவர்

தாராபுரம் என்ஜிஓ காலனியில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  • Share this:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்ஜிஓ காலனியில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முயன்ற கடலூர் மாவட்டம், செட்டி பாறை காலனியைச் சேர்ந்த கோவிந்தன், லட்சுமி, தம்பதியரின் மகன் குணாளன் என்பவரை பிடித்த பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புதன்கிழமை இரவு 11 : 30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான இரு நபர்கள் கையில் கத்தி பூட்டை உடைக்க பயன்படுத்தும் சுத்தியல் ஆகிய ஆயுதங்களுடன் என்ஜிஓ காலனி பகுதியில் உள்ள சப் கலெக்டர் பங்களாவில் மதுபோதையில் மதில் சுவரைத் தாண்டி இறங்கியுள்ளனர்.

அப்போது அந்த வழியாக சென்ற அப்பகுதி பொதுமக்கள் சிலர் இதை பார்த்துள்ளனர். ஆள் நடமாட்டத்தை கண்டதும் திருடர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அப்பகுதி பொதுமக்கள் திருடனை துரத்தி சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குணாளன் மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டான். அவனுடன் வந்த அவனுடைய கூட்டாளி தப்பிச்சென்றன்.

கைதானவர்


குணாளனிடம் விசாரித்த பொதுமக்க்களிடம் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததுடன் பொதுமக்களை தகாத வார்த்தையில் திட்டியும் பேசியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாராபுரம் சப் கலெக்டர் பங்களாவிலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க... Ariyalur Power Shutdown : அரியலூரில் இன்று (06.05.2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மேலும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தொடர்ந்து என்ஜிஓ காலனியில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஆதலால் போலீசார் என்ஜிஓ காலனி பகுதியில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர். மேலும் ஏற்கனவே நடைபெற்ற வழிப்பறி சம்பவம் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் ஆகிய திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட திருடர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஜாமீனில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் போட வேண்டும் எனவும் தப்பி ஓடிய திருடனை போலீசார் உடனே பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: