இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உள்ள குமரன் நினைவகத்தில் உள்ள குமரன் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, குமரன் உயிரிழந்த இடத்தில் உள்ள நினைவு துணை சுற்றிலும் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைக்கிறேன்.
திமுகவின் 100 நாள் சாதனை நூற்றாண்டு சாதனையாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றனர், ஆனால் 100 நாட்கள் வேதனையாக அமைந்ததே தவிர சாதனையாக அல்ல.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதில் மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழில் வழிபாடு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தற்போது விளம்பரத்திற்காக திமுக இதனை புதிய முயற்சியாக மேற்கொண்டு வருகிறது. எனினும் இதனை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிரதமர் மோடி பதவியேற்ற பின்பு தான் சுதந்திர தினத்திற்கும், தேசியக் கொடிக்கும் முழு மரியாதை கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arjun Sampath