2 லிட்டர் பெட்ரோல் இலவசமா வேணுமா.. லீவு போடாம வேலைக்கு வாங்க - திருப்பூரை கலக்கும் விளம்பரம்

திருப்பூர்

திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் எழுதிவைத்துள்ள விளம்பர பலகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் திருப்பூரில் ஒருவாரம் முழுமையாக வேலைக்கு வந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற விளம்பரம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திருப்பூரில் பெட்ரோல் விலை 102 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். மீண்டும் தொழிலாளர்கள் திரும்பி வந்தாலும் தொழிலாளர்கள் தேவையும் அதிகரித்தது உள்ளது.

Also Read: 6 வருஷம் இல்ல 9 வருஷமாம்.. தமிழக அரசுப்பேருந்துகளின் ஆயுட்காலம் உயர்வு - அரசாணை வெளியீடு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திர டைலர்கள் ஒரு வாரம் வேலை செய்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என எழுதி தனது தொலைபேசி எண்ணையும் இணைத்து விளம்பரமாக  மின் கம்பங்களில் கட்டி வைத்துள்ளார். இந்த விளம்பர பலகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: