Home /News /tamil-nadu /

குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதால் தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் கைது!

குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதால் தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் கைது!

தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

Tiruppur District : பல்லடம் அருகே கோடாங்கிபாளையத்தில் தினமும் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதால் தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையம் பகுதியில் பயன்பாடற்ற கல்குவாரி மற்றும் கிரசர் உள்ளது . இதில் பழனியை சேர்ந்த செல்வராஜ் 42 என்பவர் தனது தாய் மற்றும் மகன் மகள் ஆகியோருடன் குடியிருந்து கொண்டு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வந்துள்ளார் .இவரது மனைவி இறந்து சில வருடங்கள் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

    மது பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தாய் மற்றும் மகன் மகளுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார் .இதனை குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் திருந்தாமல் குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றித்திரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று இரவு குடித்து விட்டு வீடு திரும்பிய செல்வராஜ் வீட்டில் இருந்த மகன் ,மகள் மற்றும் தாய் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



    இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது மகன் அஸ்வத் 20 தந்தை செல்வராஜை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த கருங்கல்லை தூக்கி தலை மீது போட்டதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ALSO READ |  சாலையில் வீணாகச் செல்லும் குடிநீரில் துணி துவைத்து, குளித்து விட்டுச் சென்ற நபர் ... அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு
     மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக செல்வராஜின் மகன் அஸ்வத்தை கைது செய்துள்ளனர். குடிபோதையில் குடும்பத்தினரிடம் ரகளை செய்து வந்த குடிகார தந்தை ஒருவரை பெற்ற மகனே தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tiruppur

    அடுத்த செய்தி