Home /News /tamil-nadu /

ஐநாக்ஸ் திரையரங்குகளை கைப்பற்றிய பி.வி.ஆர் குரூப் : 'தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பாதிப்பு' - திருப்பூர் சுப்பிரமணியம்

ஐநாக்ஸ் திரையரங்குகளை கைப்பற்றிய பி.வி.ஆர் குரூப் : 'தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பாதிப்பு' - திருப்பூர் சுப்பிரமணியம்

பி.வி.ஆர் குரூப்

பி.வி.ஆர் குரூப்

PVR Group : மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றுவதன் மூலம் பட தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தர்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க நேரிடும் என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

    மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றுவதால் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என திருப்பூர் சுப்பிரமணியம் நியூஸ்18தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நியூஸ்18தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த திருப்பூர் சுப்பிரமணியம், பி.வி.ஆர் சினிமாஸ் நிறுவனம், சத்யம் , ஐநாக்ஸ் திரையரங்குகளை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து மல்டி பிளக்ஸ் திரையரங்குகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றுவதன் மூலம் நேரடியாக திரையரங்குகளுக்கு பாதிப்பு இல்லை எனவும்,  சிறிய திரையரங்குகள் தான் திரைத்துறையை தொடர்ந்து இடர்பாடு இல்லாமல் நடத்த வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் திரையரங்குகள் பெரிய படங்களின் பொழுது ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதால் விநியோகஸ்தர்கள் பெரும் சுமை இன்றி படங்களை பெற முடிவதாகவும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இதுபோன்ற நடைமுறை இல்லாததால் படம் திரையிட்ட பின்னரே அந்த தொகை விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் இதுபோன்ற காரணங்களால் வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு முழு நிதிச்சுமை ஏற்படும் எனவும் எனவே சிறிய திரையரங்குகளுக்கு கூடுதல் சதவிகிதத்தை கொடுத்து காப்பாற்றினால் மட்டுமே திரைத்துறை தொடர்ந்து நல்ல முறையில் இயங்கும் எனவும் கூறியுள்ளார்.



    மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றுவதன் மூலம் முழுமையான நிதிச்சுமையை விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களே முழுமையாக ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் போது பட தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தர்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Theatre, Tirupur

    அடுத்த செய்தி