Home /News /tamil-nadu /

கரகாட்டக்காரன் பட பாணியில் சம்பவம்... பள்ளி பேருந்து சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு..

கரகாட்டக்காரன் பட பாணியில் சம்பவம்... பள்ளி பேருந்து சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு..

பள்ளி பேருந்து

பள்ளி பேருந்து

Viral Video: பள்ளி பேருந்துகளை உரிய முறையில் பராமரித்து இயக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூரில் பள்ளி வாகனத்தின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லவும்,வீடுகளில் விடவும் 10 பள்ளி பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பள்ளி பேருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் பொன்னாபுரம் பகுதியில் பின் சக்கரம் கழண்டு பேருந்துக்கு முன்னே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயமடைந்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read: சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார்?.. எகிறும் எதிர்பார்ப்பு

கரகாட்டக்காரன் படத்தில் காரின் சக்கரம் கழண்டு ஓடும் காட்சியைக் கண்டு சிரித்த அனைவரும் இந்த பள்ளிப் பேருந்தின் சக்கரம் கழண்ட காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு செல்லும் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி பேருந்துகளை உரிய முறையில் பராமரித்து இயக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: School Bus, Tamilnadu, Tiruppur, Video

அடுத்த செய்தி