Home /News /tamil-nadu /

கல்லூரி மாணவியை தனிமைக்கு அழைத்த காவலருக்கு தர்ம அடி.. சஸ்பெண்ட் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

கல்லூரி மாணவியை தனிமைக்கு அழைத்த காவலருக்கு தர்ம அடி.. சஸ்பெண்ட் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

காவலருக்கு தர்ம அடி

காவலருக்கு தர்ம அடி

பெண்ணின் எண்ணுக்கு அழைத்து காவலர் மாணவியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவலர் கூறிய இடத்திற்கு சென்று அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் காயமடைந்த காவலர் சுப்பிரமணி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
    திருப்பூரில் பெண்ணை செல்போன் மூலம் தனிமைக்கு அழைத்த காவலருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவலரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வெள்ளியம் பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலருடன் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சுப்பிரமணி(38) இருவரிடமும் விசாரணை செய்து அலைபேசி எண்ணை பெற்றுள்ளார்.

    இதைதொடர்ந்து, நேற்று பெண்ணின் எண்ணுக்கு அழைத்து காவலர் மாணவியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவலர் கூறிய இடத்திற்கு சென்று அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் காயமடைந்த காவலர் சுப்பிரமணி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் காவலர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர்- திருப்பூர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Police, Tiruppur

    அடுத்த செய்தி