ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருப்பூரில் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் நூதன திருட்டு: பொதுமக்கள் போராட்டம்- தலைமை காசாளர் கைது

திருப்பூரில் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் நூதன திருட்டு: பொதுமக்கள் போராட்டம்- தலைமை காசாளர் கைது

வங்கி தலைமை காசாளர் கைது

வங்கி தலைமை காசாளர் கைது

திருப்பூர் மாவட்டம் கேத்தனூரில் உள்ள எஸ்.பி.ஐ, வங்கி கிளையில், சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில், அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் நூதன திருட்டு அரங்கேறியது தொடர்பாக, வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கேத்தனூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளையில், சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.

இந்த நகைகளை யாருக்கும் தெரியாமல் சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்து நூதன திருட்டில் ஈடுபட்டிருக்கிறார் வங்கியின் தலைமை காசாளர் சேகர்.

ஒரு கட்டத்தில் இதுபற்றி தெரியவர அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், வங்கியை முற்றுகையிட்டனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார், தலைமை காசாளர் சேகரை கைது செய்து 144 சவரன் நகை மற்றும் 19 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Also read... தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா? - ராதாகிருஷ்ணன் விளக்கம்

பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையடுத்து, பல்லடம் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர், வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது வங்கி தரப்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இழப்பீடு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

First published:

Tags: Palladam, SBI Bank