பல்லடத்தில் குடியிருப்பில் நோட்டம் பார்த்த வடமாநில இளைஞர் - மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

பல்லடம்

வடமாநில இளைஞர் வேலை இழந்த நிலையில் தனது நண்பர்களை காண குன்னாங்கள்பாளையம் பகுதிக்கு வந்துள்ளார்.

  • Share this:
பல்லடம் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபரை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குனனாங்கள்பாளையத்தில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு வீட்டினுள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து பிடித்த அப்பகுதியினர் தர்ம அடி கொடுத்து கை,கால்களை கட்டி போட்டு பல்லடம் போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

Also Read: காவலாளியை கட்டிப்போட்டு நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி - வடமாநில கும்பலின் கைவரிசையா விசாரிக்கும் காவல்துறை

இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் வாலிபரை மீட்டு பல்லடம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் திருட முயன்ற வாலிபர் அசுர ஃபுல்லா 24 என்பது தெரியவந்தது.  அவர் மேற்குவங்க மாநிலம் பர்கானா பகுதியை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாக பல்லடம் பொள்ளாச்சி சாலையில் வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள கோகுல் ஹை ஃபேஷன் என்ற பனியன் நிறுவனத்தில் வேலை  செய்து வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது வேலையிலிருந்து நின்று விட்டு சின்னகரையருகே வேலை தேடி நண்பர்களை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் என்ன செய்வது என்று தெரியாமல் குன்னாங்கள்பாளையத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்ததும் பொதுமக்களால் பிடிபட்டு பல்லடம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர் மது போதையில் இருந்ததை அடுத்து அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: