Home /News /tamil-nadu /

மருத்துவரை மிரட்டிய போலி நிருபர்.. வாட்ஸ் அப்பில் அவதூறு - பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மருத்துவரை மிரட்டிய போலி நிருபர்.. வாட்ஸ் அப்பில் அவதூறு - பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

போலி நிருபர் மீது மருத்துவர் புகார்

போலி நிருபர் மீது மருத்துவர் புகார்

மருத்துவமனையை குறித்தும் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் எந்தவித ஆதாரமும் இல்லாத அவதூறு செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது.

பல்லடத்தில் மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து பணம் பறிக்க முயன்றதாக போலி நிருபர் மீது பல்லடம் போலீசில் மருத்துவர் புகார்.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் டாக்டர் பிரசாத் சேவியர் (32) .இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்டம், ராயர்பாளையம், மெஜஸ்டிக் சர்க்கிள் பகுதியில் வசித்து வருகிறார்.மேலும் இவர் பல்லடம் கோவை சாலையில் அண்ணாநகரில் பிரைம் மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார்.

Also Read: Sasikala Audio: ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தாததே தேர்தல் தோல்விக்கு காரணம் - குற்றஞ்சாட்டும் சசிகலா

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு பெரியார் நகரைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் மேலும் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு அவருக்கு சொந்தமான காரில் பல்லடம் கோவை சாலையிலுள்ள டாக்டர் பிரசாத் சேவியரின் மருத்துவமனைக்கு முன்பாக சென்று காரை நிறுத்திவிட்டு அத்துமீறி மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த மருத்துவரின் சகோதரரிடம் டாக்டர் குடும்பத்தில் என்ன பிரச்சனை,அதை செய்தியாக வெளியிடாமல் இருக்க பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

டாக்டரின் சகோதரர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சரவணகுமார் உள்பட 3 பேரும் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலை சரவணன் என்பவன் மருத்துவரின் குடும்பத்தை குறித்தும் மருத்துவமனையை குறித்தும் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் எந்தவித ஆதாரமும் இல்லாத அவதூறு செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து மருத்துவர் பிரசாத் சேவியர் தனது குடும்பத்தினருடன் சென்று பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து பல்லடம் காவல் ஆய்வாளர் தங்கபாண்டியன் புகாரினை பெற்றுக்கொண்டு கடந்த 2 நாட்களுக்கும் மேலாக ஒரு மருத்துவர் என்றும் கூட பாராமல் அப்புகாரின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியது மட்டுமின்றி பணம் கேட்டு மிரட்டிய சரவணகுமாருக்கு ஆதரவாக ஆய்வாளர் தங்கபாண்டியன் சமாதானமாகப் போகும்படி பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பல்லடம் டிஎஸ்பி வெற்றிச்செல்வனிடம் டாக்டர் பிரசாத் சேவியர் மேல்முறையீடு செய்தார். அதன்பேரில் மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டி கொடுக்காவிட்டால் செய்தியை பரப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்த சரவணகுமார் என்பவனை பிடித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் பிரசாத் சேவியர் கூறுகையில் எனது குடும்பத்தைப் பற்றியும் மருத்துவமனையை பற்றியும் பணம் கொடுக்காவிட்டால் அவதூறு பரப்புவேன் என்று மிரட்டியது குறித்த வீடியோ பதிவு காட்சிகளுடன் சென்று ஆதாரங்களை கொடுத்தேன். சரவணகுமார் மீது பல்லடம் போலீசில் புகார் அளித்தும் இரண்டு நாட்களாக போலீசார் தன்னை அலைக்கழித்து வருகின்றனர். ஒரு மருத்துவரான தனக்கே இந்த நிலைமை என்றால் அப்பாவி மக்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் என்றும் வேதனையுடன் கூறினார். உடனடியாக போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சரவணகுமார் உள்ளிட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே மருத்துவரிடம் பணம் கேட்டு தராததால் வாட்ஸ் அப் குழுக்களில் அவதூறு செய்தியை பரப்பிய சரவணகுமார் என்பவன் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாட்ஸ் அப் குழுக்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பகிரங்க மன்னிப்பு கோரியது தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

எது எப்படி இருந்தாலும் உயிர்காக்கும் மகத்தான மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவரிடம் போலி நிருபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டியதும் தர மறுத்ததால் டாக்டரை பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் வாட்ஸ் அப் குழுக்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படும் சம்பவத்தில் அவதூறு பரப்பிய நபரே வாட்ஸப் வீடியோவில் பகிரங்க மன்னிப்பு கேட்டு அதை பரப்பி வருவதும் இதையே போலீசார் ஆதாரமாகக் கொண்டு இது போன்ற நபர்களை நடமாட விட்டால் சமூகத்திற்கு கேடு என்பதை உணர்ந்து, அவன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்லடம் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Doctor, Police, Tirupur

அடுத்த செய்தி