• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தங்கக்கடத்தல்.. சினிமா பாணியில் கார் சேஸிங் - டிரைவர் கடத்தலில் திடீர் திருப்பம்

தங்கக்கடத்தல்.. சினிமா பாணியில் கார் சேஸிங் - டிரைவர் கடத்தலில் திடீர் திருப்பம்

கார் சேசிங்

கார் சேசிங்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக   கடத்திவரப்பட்ட  5 கிலோ தங்கம் தான் இந்த ஆள் கடத்தலுக்கு மூலக்காரணம் என கண்டுபிடித்த காவல்துறையினர்..

  • Share this:
கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் , மூன்று கார்கள் மூலம் ஒரு சாண்ட்ரோ காரை துரத்தி வந்து , ஓட்டுநர் சக்தி ( எ ) மகேஸ்வரனை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி முனையில் கடத்தி சென்ற சம்பவத்தில் புதிய திருப்பம்.

திருப்பூர் மாநகரம் , அம்மாபாளையம்  பகுதியில் வசிப்பவர் பாக்கியவதி.தனது வீட்டில் ஒன்றரை மாதமாக குடியிருப்பவரும் , ஓட்டுனருமான சக்தி ( எ ) மகேஷ்வரன் என்பவரோடு கடந்த 26ம் தேதி சொந்த வேலையாக தாராபுரம்  சென்று விட்டு திருப்பூர் வந்து கொண்டிருந்தனர். சக்தி ( எ ) மகேஷ்வரனுக்கு அவரது நண்பரான அழகர்சாமி என்பவர் அலைபேசியில் அழைத்து பல்லடத்தில் இருப்பதாகவும் சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read:  மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஆப்கான் குழந்தை - இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம் கொண்டாடும் நெட்டிசன்கள்

நண்பரை சந்திக்க  பல்லடம் கோவை ரோடு பெரும்பாளி அருகே வரும்போது Audi , xylo மற்றும் Swift கார்களில் வந்த ஏழு நபர்கள் மேற்கண்ட சான்ட்ரோ காரை வழிமறித்து அதிலிருந்த சக்தி ( எ ) மகேஷவரனை கத்தி முனையில் அவர்கள் வந்த காருக்கு இழுத்து சென்று கடத்தியுள்ளனர் . இந்நிகழ்வு சம்மந்தமாக காருக்குள் இருந்த பாக்கியவதி அளித்த புகாரின் பேரில் பல்லடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .

வழக்கு தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் , சக்தி ( எ ) மகேஷ்வரனை கடத்துவதற்காக , சக்தியின் நண்பர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரமணிகண்டன் , அழகர்சாமி ஆகிய இருவரை ஏற்கனவே கடத்தியதும் , அவர்களை மேற்கண்ட சைலோ காரில் வைத்து அழைத்து வந்ததும் தெரிய வந்தது. தற்போது சக்தியுடன் சேர்ந்து கடத்தப்பட்ட மூன்று பேருடன் கடத்தல்காரர்கள் கீரனூர் பகுதியில் மேல்கரைபட்டி காட்டுபகுதியில் மறைந்திருந்துள்ளனர்.

Also Read: மனைவியை பணயமாக வைப்பாயா.. கந்துவட்டி கும்பலின் அடாவடி - தற்கொலைக்கு முயன்ற வியாபாரி

இந்நிலையில் கடத்தப்பட்ட மூவரும் ஆகஸ்ட் 27-ம் தேதி அன்று காலை அவர்களிடமிருந்து தப்பித்து வந்துள்ளனர்.இந்நிகழ்வு சம்மந்தமாக கடத்தப்பட்ட மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மேற்கண்ட மகேஷ்வரன் ராமநாதபுரம் மாவட்டம் , பிஜேபி கட்சியின் விவசாய அணி செயலாளரான குட்லக் ராஜேந்திரன் என்பவரிடம் வேலை செய்து வந்துள்ளார் என்றும், இலங்கையிலிருந்து தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வரும் குற்ற செயலுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் தங்க பிஸ்கட் பரிவர்த்தனையின் போது மகேஷ்வரன் ஐந்து கிலோ தங்க பிஸ்கட்டை இலங்கையிலிருந்து கடத்தி வந்தபோது, ராமநாதபுரம் பகுதியில் காக்கி உடையிலிருந்த நபர்கள் துரத்தியதாகவும் தங்கபிஸ்கட்டை விட்டுவிட்டு மகேஷ்வரன் மட்டும் தப்பி வந்து குட்லக் ராஜேந்திரனிடம் சம்பவத்தை தெரிவித்ததாகவும்  , ஆனால் குட்லக் ராஜேந்திரன் அதை ஏற்காமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் குட்லக் ராஜேந்திரனிடம் இக்கடத்தல் பணிக்காக முதலீடு செய்த யாசர் அராபத் மற்றும் முகம்மது ரிஸ்வான் என்பவர்கள் குடலக் ராஜேந்திரனிடம் , தங்க பிஸ்கட்டை கேட்டதை தொடர்ந்து மகேஷ்வரனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் ஒருவார காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகேஷவரன் அங்கிருந்து தப்பி வந்துள்ளார் . தொடர்ந்து திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து கடந்த இரண்டு மாதங்களாக தங்கி வந்ததும் காவல்துறையின் விசாரனையில் தெரியவந்தது.

தங்க பிஸ்கட்டுகளை ஏமாற்றிய மகேஷ்வரனிடமிருந்து தங்க பிஸ்கட்டுகளை வாங்குவதற்கு முகம்மது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோர் குட்லு , அன்பு,கார்த்தி, பாண்டி மற்றும்,கோவையில் பணி புரிந்து வரும் காவலர் ராஜேஷ்வரன்   ஆகியோரை கொண்டு மகேஷ்வரனை கடத்தும் நோக்கில், முதலில் மகேஷவரனின் இருப்பிடம் அறிந்த வீரமணிகண்டன் மற்றும் அழகர்சாமி ஆகியோரை ஜூன் 25-ம் தேதி அன்று கடத்தி அவர்களிடம் மகேஸ்வரன் பற்றி விசாரித்து வந்துள்ளனர். பின்னர் ஜூன் 26 -ம் தேதி அன்று மகேஷ்வரனை பல்லடத்தில் வைத்து கடத்தியுள்ளனர் என்றும் காவல்துறையின் விசாரனையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முகம்மது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் , கோவை மாநகரில் பணிபுரியும் காவலர் ராஜேஷ்வரனையும் கைது செய்து சைலோ மற்றும் ஆடி காரையும் பறிமுதல் செய்தனர்.மேலும் சில கடத்தல் குற்றவாளிகளை கைது செய்ய இருக்கும் நிலையில் , தங்க கடத்தல் கும்பல் தொடர்பான விசாரணையையும் மேற்கொள்ள திருப்பூர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் , பிஜேபி கட்சியின் விவசாய அணி செயலாளரான குட்லக் ராஜேந்திரன் என்பவர் மீது ஏற்கனவே தங்க கடத்தல் வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: