• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்பூரில் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் அடித்துக்கொலை

திருப்பூரில் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் அடித்துக்கொலை

திருப்பூர் கொலை

திருப்பூர் கொலை

திருப்பூரில் டாஸ்மாக் கடை அருகில் நடந்துள்ள கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
திருப்பூரில் இன்று அதிகாலை டாஸ்மாக் மதுக்கடை அருகில் நடுத்தர வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் உஷா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த கடை அருகில் மதுபானக் கூடமும் செயல்படுகிறது. இந்த மதுபானக் கடை அருகில் நடுத்தர வயது நபர் ஒருவர் இன்று அதிகாலை இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் திருப்பூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த நிலையில், தலையில் பலத்த காயங்கள் உள்ளதை அடுத்து மேற்படி நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றிய தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்டது யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரில் டாஸ்மாக் கடை அருகில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: