Home /News /tamil-nadu /

மதுபோதையில் கார் ஓட்டி 7 வாகனங்கள் மீது மோதிய நபர்... தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

மதுபோதையில் கார் ஓட்டி 7 வாகனங்கள் மீது மோதிய நபர்... தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

மது போதையில் கார் ஓட்டியவர்

மது போதையில் கார் ஓட்டியவர்

Tiruppur District : நாகராஜ் அதிகமாக மது குடித்து விட்டு வஞ்சிபாளையம் ரோடு வழியாக ராக்கியா பாளையம் வந்துள்ளார். மேலும், ராக்கியா பாளையத்தில் காரை நிறுத்தி மீண்டும் மது அருந்தி விட்டு போதை தலைக்கேறிய நிலையில் காரை இயக்கியுள்ளார்.

    திருப்பூர் அருகே மது போதையில் காரை இயக்கி  7 வாகனங்கள் மீது மோதிய நபரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர் திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியிலிருந்து அவிநாசி ரோடு நோக்கி அதி வேகமாக கார் ஒன்று வந்துள்ளது. அந்த கார் ராக்கியாபாளையத்திலிருந்து அம்மாபாளையம்வரும் வழியில் 3 நான்கு சக்கர வாகனங்கள் 2 இருசக்கர வாகனங்களை உரசிக்கொண்டு அதிவேகமாக வந்துள்ளது.

    அதில் ஒரு இரு சக்கர வாகனத்தை சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு இழுத்து வந்துள்ளது. பின்னர் திருப்பூர்- அவிநாசி ரோடு  அம்மாபாளையம் பகுதியை அடைந்த பொழுது நிலைதடுமாறிய கார்ரோட்டின் நடுவில் வைத்து இருந்த டிவைடர் மீது ஏறி மேலும் 2 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதிபெரும் விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை இயக்கி வந்தவரை பிடித்து தர்ம அடிகொடுத்து திருமுருகன் பூண்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையும் படியுங்கள் :  திருநெல்வேலியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்
     போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்திருப்பூர் மாவட்டம் இடுவாய் ரோடு இடுவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (50). என்பதும், மேலும் அவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் அக்கௌண்ட்ஸ் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் நாகராஜ் அதிகமாக மது குடித்து விட்டு வஞ்சிபாளையம் ரோடு வழியாக ராக்கியா பாளையம் வந்துள்ளார். மேலும், ராக்கியா பாளையத்தில் காரை நிறுத்தி மீண்டும் மது அருந்தி விட்டு போதை தலைக்கேறிய நிலையில் காரை இயக்கியுள்ளார்.




    அப்போது தான் வரும் வழியில் 7 வாகனங்கள் மீது மோதியுள்ளார். பின்னர்அவரை போலீசார் பாதுகாப்பாக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த ரவி (70), சொர்ணபுரி ரிச்லேண்ட் பகுதியை சேர்ந்த நித்திஷ் (23) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tiruppur

    அடுத்த செய்தி