மடத்துக்குளம் அருகே சிறுமிகளின் ஆபாச வீடியோவை முகநூலில் பதிவிட்ட கோவில் பூசாரி கைது!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்ற பாலாஜி( வயது 50). திருமணமாகாத இவர் வெங்கிட்டாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணி செய்து வருகிறார். இவர் போலியாக முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து NCMEC சைபர் டிப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தது விசாரணை மேற்கொண்டனர். பாலாஜி பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் ஐ பி (IP address) முகவரியின் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.