நாளை முழு ஊரடங்கு; கொரோனா விதிகளை மறந்து டாஸ்மாக் கடையில் அலைமோதிய குடிமகன்கள்!

டாஸ்மாக்

நாளை முழு ஊரடங்கு என்பதால் திருப்பூர் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி இன்றி மதுபானம் வாங்க குவிந்த குடிமகன்களால், கொரோனா விதிமுறைகள் கேள்விக்குறியானது.

  • Share this:
நாளை முழு ஊரடங்கு என்பதால் திருப்பூர் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி இன்றி மதுபானம் வாங்க குவிந்த குடிமகன்களால், கொரோனா விதிமுறைகள் கேள்விக்குறியானது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் எப்போதும் சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் சனி ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் மாலை நேரத்தில் ஊதியம் பெற்ற பனியன் தொழிலாளர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு படை எடுத்ததால் திருப்பூர் மாநகரில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி இன்றி கூட்டம் அலை மோதியது.

சில கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மது பிரியர்கள் மதுபானம் வாங்கி சென்றனர். தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிக அளவில் கூடியதால் முன்னதாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை பயன்படுத்தாமல் மதுபானம் வாங்க முண்டியடித்தனர்.

இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நோக்கம் முற்றிலும் சிதைந்து விட்டதாகவும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

 
Published by:Esakki Raja
First published: