திருப்பூர் மாநகரின் எல்லை பகுதியான அம்மாபாளையத்தை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் வேலை செய்த நபரை சிறுத்தை தாக்கியது. இதனால் காயம் அடைந்த அந்த நபர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருப்பூர் மாநகர பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பாப்பாங்குளம் பகுதியில் உள்ள சோளக்காட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன் பதுங்கிய சிறுத்தை சிறுத்தை 5 பேரை தாக்கிவிட்டு தற்போது திருப்பூரை நோக்கி இடம்பெயர்ந்துள்ளது. தற்போது பொங்குபாளையம் பகுதியில் நடமாடி வந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் காணாமல்போன வளர்ப்பு நாய் ஒன்று, கிணறு ஒன்றின் அருகே ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. வனத்துறையின் ஆய்வில் சிறுத்தை, அந்த நாயை அடித்து கொன்று சாப்பிட்டது தெரியவந்தது. மீதம் உள்ள நாயின் இறைச்சியை சாப்பிட சிறுத்தை வரலாம் என்பதால் அப்பகுதியிலும் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
Read More : பொட்டு வைக்ககூடாது என்று என்னை வற்புறுத்தவில்லை - அரியலூர் மாணவியின் புதிய வீடியோ
மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையின் நடமாட்டதை வனத்துறையினர் கண்காணித்து வருந்தால், சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொங்குபாளையம் கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
Must Read : மதுரையில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 168 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
இந்நிலையில், திருப்பூர் நகர் பகுதிக்குள் சிறுத்தை நுழைந்து ஒருவரை தாக்கியதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.