காங்கேயம் நகராட்சியில் முதற் கூட்டம்,
திமுகவில் இருந்து நீக்கப்பட்டு தற்போது நகர்மன்றத் தலைவராக உள்ள சூர்ய பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்திலேயே வந்திருந்த கவுன்சிலர்களும் , பொதுமக்களும் வாயடைத்து போகும் அளவில் , முதல் அவசரக் கூட்டத்தில் 19 தீர்மானங்களும் , சாதாரண கூட்டத்தில் 75 தீர்மானங்களும் அதிரடியாக நிறைவேற்றி கோடிக்கணக்கிற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சி தேர்தல் முடிவுற்று நகராட்சித் தலைவர் பதவி , கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுக சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்ட சூரிய பிரகாஷ் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது கூட்டணி கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் திமுக தலைமை,கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சியினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அறிக்கை விட்டது.
ஆனால் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சூரிய பிரகாஷ் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார். இதனை அடுத்து திமுக தலைமை அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது.
ALSO READ | டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதை தொடர்ந்து 16 உறுப்பினர் கொண்ட நகராட்சி கூட்டம் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி தலைவருக்கு ஆணையாளர் மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இருபது நிமிடங்கள் நடைபெற்ற கூட்டத்தில் 94 தீர்மானங்கள் அதிரடியாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நகராட்சித் தலைவராக உள்ள சூரியபிரகாஷ் பயன்பாட்டுக்கு ரூ.15 லட்சத்தில் ஸ்கார்பியோ கார் வாங்கவும், நகராட்சி அன்றாட பணிகளுக்கு பேப்பர் பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வாங்க ரூ 50 லட்சத்துக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. சாதாரண கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 75 தீர்மானங்களுக்கு சுமார் 97 கோடியே 39 லட்சத்துக்கு நிதி ஒப்புதல் பெறப்பட்டது. அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்களுக்கு ரூ 70 லட்சம் நிதிக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
ALSO READ | கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு செல்லாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கங்காயம் நகராட்சியின் முதல் கூட்டத்திலேயே தற்போது சுயேச்சையாக உள்ள நகராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ 98 கோடியே 97 லட்சத்துக்கு அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது கவுன்சிலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று நிலைக்குழு,கணக்கு குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.