Home /News /tamil-nadu /

வங்கிகளில் அடகு வைத்த நகைகளில் கைவரிசை காட்டிய நகை மதிப்பீட்டாளர்!! வாடிக்கையாளர்கள் குமுறல்!

வங்கிகளில் அடகு வைத்த நகைகளில் கைவரிசை காட்டிய நகை மதிப்பீட்டாளர்!! வாடிக்கையாளர்கள் குமுறல்!

வாடிக்கையாளர்கள் அந்த நகைகளை கடைகளில் வாங்கிய போது குறிப்பிட்டிருந்த எடையும், கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடாக இருந்தது.

வாடிக்கையாளர்கள் அந்த நகைகளை கடைகளில் வாங்கிய போது குறிப்பிட்டிருந்த எடையும், கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடாக இருந்தது.

வாடிக்கையாளர்கள் அந்த நகைகளை கடைகளில் வாங்கிய போது குறிப்பிட்டிருந்த எடையும், கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடாக இருந்தது.

பல்லடம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திருடிய நகை மதிப்பீட்டாளரை கைது செய்து நகைகளை மீட்டுத் தரும்படி  விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. இதில் கோவையைச் சேர்ந்த சுதா என்பவர் கிளை மேலாளராகவும், நகை மதிப்பீட்டாளராக திருப்பூரை சேர்ந்த சேகர் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பொதுமக்கள் கணக்குகளை தொடங்கி வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா, ஆதார் கார்டு ஆகியவற்றை நகல் எடுத்து வந்து கொடுத்தால் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன் உதவி வழங்குவதாக கூறி வந்துள்ளார்.

இதையும் படிங்க - சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள்? ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

அதனை நம்பிய பலரும் நகைகளை அவரிடம் கொடுத்து விட்டு தங்களது வீடுகளுக்கு சென்று மதிப்பீட்டாளர் கேட்ட ஆவணங்களை எடுத்து வந்து கொடுத்து நகை கடனை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நகை மதிப்பீட்டாளரால் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அந்த நகைகளை கடைகளில் வாங்கிய போது குறிப்பிட்டிருந்த எடையும், கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடாக இருந்தது.

இது வாடிக்கையாளர்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஜல்லிப்பட்டி, வாவிபாளையம், மந்திரிபாளையம், கொல்லம்பாளையம், கேத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து கேத்தனூர் வங்கி கிளைக்கு சென்று கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டறிந்தனர்.



இதில் அங்கு நகை மதிப்பீட்டாளர் ஆக பணியாற்றி வரும் சேகர், தான் வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதற்காக அடமானம் வைக்க கொண்டுவரும் நகைகளிலிருந்து ஒரு சிறு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் வெட்டி திருடி எடுத்து வந்ததையும், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நகைக்கு உண்டான தொகையை திருப்பி செலுத்தி விடுவதாகவும் ஒப்புக்கொண்டார்.

இதனிடையே நகை மதிப்பீட்டாளர் சேகரின் இந்த திருட்டு குறித்த தகவல் பரவியதை தொடர்ந்து ஜல்லிப்பட்டி வாவிபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டனர்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்து வங்கி மேலாளர் மற்றும் புகாருக்கான சேகர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பாதிக்கப்பட்ட நகை கடன் பெற்ற விவசாய குடும்பத்தினர் அந்த வங்கி முன்பாக முற்றுகையிட்டு உடனடியாக நகை மதிப்பீட்டாளர் சேகரை கைது செய்ய வேண்டும் அவர் திருடிய நகைகளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வாடிக்கையாளர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்ததை தொடர்ந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் சேகருக்கு மட்டும் தொடர்புள்ளதா அல்லது வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கும் பங்குள்ளதா என்பதை காவல் துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Bank, Bank Loan

அடுத்த செய்தி