முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இன்ஸ்டாகிராம் காதல் : மதம் மாறச் சொல்லி அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டும் காதலன்.. திருப்பூரில் பெண் புகார்

இன்ஸ்டாகிராம் காதல் : மதம் மாறச் சொல்லி அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டும் காதலன்.. திருப்பூரில் பெண் புகார்

இன்ஸ்டாகிராம் காதல் : மிரட்டும் காதலன்.. பெண் புகார்

இன்ஸ்டாகிராம் காதல் : மிரட்டும் காதலன்.. பெண் புகார்

Instagram Love | காதலன் மதம் மாறச் சொல்லி, தொழுகை செய்யச் சொல்லி அதிகம் டார்ச்சர் செய்வதாகவும், சாதியை குறிப்பிட்டு கெட்ட வார்த்தையில் பேசுவதாகவும் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :

இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபருடன் இரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் மதம் மாற முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்பவர் கரூரை சேர்ந்த பவித்ரா (21) என்ற பெண் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒன்றாக தங்கி இரண்டு மாதங்கள் வாழ்ந்த நிலையில் பவித்ராவை மதம் மாற்ற வற்புறுத்தி வந்ததாகவும், மேலும் மது அருந்திவிட்டு தன்னை வற்புறுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் இதனால் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் தனது மதத்திற்கு மாற வேண்டும் என மிரட்டி ஒன்றாக இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வரும் இமான் ஹமீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பவித்ரா, "இமான் ஹமீப் என்பவரும் நானும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்தோம். நான் இந்து. அவர் முஸ்லீம். இது காதல் செய்யும் போது எனக்குத் தெரியாது. நண்பர்களாக இருந்தோம். காதலிக்கவில்லையெனில் இறந்து விடுவேன் என கூறியதால் நானும் காதலிக்க ஆரம்பித்தேன். பின்னர் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கலாம் எனகூறினார். ஒன்றாக வேலை பார்த்தால் மதம் மாற வேண்டும் என கூறினார். மதரஸாவாக பெயர் மாற்றி நிக்கா செய்தால் எங்கள் வீட்டில் சம்மதம் தெரிவிப்பார்கள் என கூறினார்கள்.

நான் விருப்பம் இல்லை என கூறினேன். கட்டாயப்படுத்தியதால் எனக்கு நானே தாலி கட்டிக்கொண்டு 2 மாதம் இருவரும் ஒன்றாக இருந்து ஒன்றாக வேலைக்கு சென்று வந்தோம். வேலைக்கு போய்ட்டு குடித்து விட்டு வந்து என்னை மதம் மாறச் சொல்லி, தொழுகை செய்யச் சொல்லி அதிகம் டார்ச்சர் செய்தார். எனது சாதியை குறிப்பிட்டு என்னை கெட்ட வார்த்தையில் பேசி இழிவு படுத்திக் கொண்டே இருந்தார். எனது போனை வாங்கி வைத்து கொண்டு மதம் மாறவில்லை என்றால் நீயும் , நானும் எடுத்துக்கொண்ட நிர்வாண படங்களை வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டுவதாகவும் இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

top videos

    செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர்

    First published:

    Tags: Instagram, Love, Tirupur