Home /News /tamil-nadu /

‘மீண்டும் மஞ்சப்பை’ வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட் ஆர்டர்கள் அதிகரிப்பு

‘மீண்டும் மஞ்சப்பை’ வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட் ஆர்டர்கள் அதிகரிப்பு

 மஞ்சப்பை

மஞ்சப்பை

முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தன்னார்வலர்கள் பலரும் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட டிசர்ட்களை ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.

தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு இயக்கத்தால் திருப்பூரில் துணிப்பைகள் மற்றும் மீண்டும் மஞ்சப்பை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி சர்ட் ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நாம் பலவற்றை புதிதாக அடைந்திருந்தாலும் பல விஷயங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பையும் சேர்த்து ஏற்படுத்தி வருகிறோம். அதில் குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தி வந்த துணிப்பைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு. கைவீசி சென்றால் கடையிலேயே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர் கொடுப்பார்கள் என நம் வசதிக்காக துணிப்பையை புறக்கணித்து ஒரு புறம் என்றால் மஞ்சப்பை கிராமத்தான் பை என புது நாகரீகம் கருதியவர்களின் பிளாஸ்டிக் நாட்டத்தால் வழக்கொழிந்து போனது மஞ்சப்பை எனும் துணிப்பை.

20 நிமிடங்கள் மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பைகள்  அதிக மக்கள்  தொகை அடர்த்தி கொண்ட நம்நாட்டில் இந்த பிளாஸ்டிக் பைகள் வெகு விரைவாக பாதிப்பை ஏற்படுத்தியதை சில ஆண்டுகளில் உணரத்துவங்கி உள்ளோம். என்றாலும் அதில் இருந்து மீள்வது அத்தனை சுலபமான விஷயமாக இல்லை.

பிளாஸ்டிக் கவர் கொடுக்கா விட்டால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க மறுப்பதாக வர்த்தகர்களும், கடைக்காரர்கள் தருவதால் நாங்கள் பை எடுத்துச் செல்வதை மறந்து விடுகிறோம் என பொதுமக்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டு தெரிவித்தாலும் இரு தரப்பினரின் மெத்தனப் போக்குதான் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு என்பது இயலாத ஒரு காரியமாக மாறி உள்ளது.

அரசு தரப்பில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை என்ற  விழிப்புணர்வு இயக்கத்தை அறிவித்தார். இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த முழக்கம் காரணமாக துணிப்பைகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக பிளாஸ்டிக் மாற்று பை கள் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மங்கலம் சாலையை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் என்பவர் 15 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப் பொருட்களை கொண்டு பைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தமிழக அரசின் விழிப்புணர்வு இயக்கத்திற்கு துணிப்பைகளை தயாரித்து கொடுத்தவரும் இவர் தான்.

Must Read : புத்தாண்டு கொண்டாட்டம் : தடை, கட்டுப்பாடுகள் என்னென்ன? சென்னை காவல்துறை அறிவிப்பு

முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தன்னார்வலர்கள் பலரும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மீண்டும் மஞ்சப்பை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டிசர்ட், தொப்பி மற்றும் துணிப்பைகளுக்கான ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.

Read More : மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்காலிக பாதை திறப்பு

துணிப்பையில் புதிய டிசைன் மற்றும் வடிவங்களிலும் ஆர்டர்கள் வருவதால் இளைய தலைமுறையினரும் துணிப்பையை பயன்படுத்த ஆர்வம் காட்ட துவங்கி உள்ளதாகவும்,  இதன் காரணமாக மீண்டும் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்தால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: MK Stalin, Pongal, Tiruppur

அடுத்த செய்தி