• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கள்ளக்காதலியுடன் தகராறு.. உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் சாலையில் ஓடிய வாலிபர் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்

கள்ளக்காதலியுடன் தகராறு.. உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் சாலையில் ஓடிய வாலிபர் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்

தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் சிசிடிவி காட்சிகள்

தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் சிசிடிவி காட்சிகள்

பல்லடத்தில் இளைஞர் ஒருவர் உடல் முழுக்க தீப்பற்றி எரிந்த நிலையில் வீதியில் ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
பல்லடம் பெரியார் நகரில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் 2வது வீதியில் உடுமலையை சேர்ந்த  மாணிக்கம் 38 என்பவர் வசித்து வருகிறார். கட்டட தொழிலாளியான இவர்  முதல் மனைவியை பிரிந்து கடந்த சில வருடங்களாக துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அருகில் இருந்த பெரியவர்கள் தலையிட்டு அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி காலை 10.30  மணி அளவில் வீட்டில் இருந்து உடல் முழுக்க தீப்பற்றி எரிந்த நிலையில்  மாணிக்கம் வீதியில் ஓடி வந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூறி கதறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அனைத்து மாணிக்கத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Also Read:  ரேவ் பார்ட்டி.. நடன அழகிகள் நிர்வாண நடனம்.. போதை சப்ளை - தனியார் ரிசார்டில் ஆட்டம் போட்ட கும்பல்

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் 90 சதவிகிதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மாணிக்கத்தை மேல் சிகிச்சைக்கு  திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாணிக்கம் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் மாணிக்கம் ஏன் தீக்குளித்தார் கள்ளகாதலி தீ வைத்தாரா அல்லது மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டாரா என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ரஸ்க்.. பேக்டரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

இந்த நிலையில் பல்லடம் பெரியார் நகரில் வீட்டிலிருந்த கட்டட தொழிலாளி மாணிக்கம் உடல் முழுக்க தீப்பற்றி எரியும் நிலையில் வீதியில் ஓடிவந்த சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே  அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: