திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கே.வி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வாணை (வயது 45). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருநெல்வேலியை சேர்ந்த தெய்வாணை பிழைப்பு தேடி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் வந்துள்ளார். கே.வி.ஆர் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வேலை பார்க்கும் இடத்தில் தெய்வாணைக்கும் உடன் பணிபுரிந்த நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொண்டு தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அந்த நபரை தெய்வாணை வற்புறுத்தி வந்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் தெய்வாணையை திருமணம் செய்துக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அந்த நபருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து இருவரையும் காவல்நிலையம் அழைத்த போலீஸார் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் அந்த நபரை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க கோரி தொடர்ந்து காவல்நிலையம் வந்துள்ளார். எந்த பலனும் இல்லாததால் விரக்தியடைந்த பெண் தான் குடியிருக்கும் கே.வி.நகர் பகுதியில் பட்டப்பகலில் நடுரோட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
Must Read : Paytm யூசர்கள் கவனத்திற்கு.. கோவிட் தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் பற்றிய முக்கிய அப்டேட்
இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பெண் தெய்வானை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Crime News, Illegal affair, Tamil News